இன்று முதல் 'நெட்ஸ்பே' நடமாடும் பணப்பையை பதிவிறக்கம் செய்யலாம்

இன்று முதல் 'நெட்ஸ்பே' நடமாடும் பணப்பையை பதிவிறக்கம் செய்யலாம்

1 mins read
0c04ee91-9dda-4898-a27d-87ce2ed48eb1
-

'நெட்ஸ்' மூலம் பணத்தைக் கட் டும் அதன் பயனாளர்கள் இன்று முதல் அந்த அட்டையைத் தங்க ளுடன் எடுத்துச் செல்ல தேவை யிருக்காது. அதற்குப் பதிலாக வந்துவிட்டது 'நெட்ஸ்பே' நடமாடும் பணப்பை. சிங்கப்பூரில் இயங்கும் ஆறு வங்கிகளின் கடன் அட்டை, ரொக்க அட்டை, 'ஏடிஎம்' வசதி ஆகியவற்றை இந்த 'நெட்ஸ்பே' நடமாடும் பணப்பை செய்துவிடும். பொருட்களை வாங்கி விட்டு அந்தக் கடையில் உள்ள சாதனத் தில் தங்கள் கையடக்கத் தொலை தொடர்புச் சாதனத்தில் பதிவிறக் கம் செய்யப்பட்டுள்ள செயலியை 'ஸ்கேன்' செய்தால் பணத்தைச் செலுத்தி விடலாம். இந்த 'நெட்ஸ்பே' செயலியை 'ஆப்பள்ஐஓஎஸ்', 'ஆண்ட்ராயிட்' கைபேசிகளில் பதிவிறக்கம் செய் துகொள்ளலாம். முதலில் டிபிஎஸ், பிஎஸ்ஓபி வங்கிகளின் சுமார் ஏழு மில்லியன் வாடிக்கையாளர்கள் செயலியைப் பதிவிறக்கம் செய்ய லாம். இத்திட்டத்தில் பங்கேற்கும் இதர வங்கிகளின் வாடிக்கையா ளர்களுக்கு இது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.

இன்று முதல் நெட்ஸ் ரொக்க அட்டைக்குப் பதிலாக நெட்ஸ்பே மூலம் பணத்தைச் செலுத்தலாம். படம்: நெட்ஸ்