பேருந்து, ரயில் மலிவுக் கட்டணங்கள்: மலிவான கட்டணங்கள் நிரந்தரமாக்கப்படலாம்

பேருந்து, ரயில் மலிவுக் கட்டணங்கள்: மலிவான கட்டணங்கள் நிரந்தரமாக்கப்படலாம்

1 mins read

உச்சநேரம் அல்லாத பொதுப் போக்குவரத்துப் பயணிகளுக்கு மலிவான கட்டணம் நிரந்தரமாக்கப் படலாம். உச்சநேரத்திற்கு முந்திய இல வசப்பயணம், உச்சமற்ற சலுகை அட்டை தொடர்பான சோதனைகள் ஆகியவற்றை மறுபரிசீலனை செய்யுமாறு பொதுப் போக்கு வரத்து மன்றத்தை, போக்குவரத்து அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது என்று மன்றத்தின் தலைவர் திரு ரிச்சர்ட் மேக்னஸ் நேற்று தனது வலைப்பதிவில் தெரிவித்திருந் தார்.

"பொதுப் போக்குவரத்தில் உச்சநேரம் அல்லாத பயணத்தின் கட்டணம் கட்டங்கட்டமாக இருக்க வேண்டுமா அல்லது வெவ்வேறான கட்டணமாக இருக்க வேண்டுமா என்பதை உறுதி செய்து அதை நிரந்தர அம்சமாக மாற்றுவது இந்த மறு பரீசிலனையின் நோக்கம்," என்று திரு மேக்னஸ் விளக்கினார். "குறிப்பிட்ட ஒரு சில மணி நேரத்துக்கான பயணங்களுக்கு ஒரே மாதிரியான கட்டணம் விதிப் பது திறனற்ற செயல்முறையாகும். "அதற்குப் பதிலாக நாள் முழு தும் உள்ள பயணங்களுக்கு தேவையின் அடிப்படையில் கட் டணங்களை வகுப்பது நீடித்து நிலைத்திருக்கக்கூடியது," என் றும் கூறினார்.