தனது தாயாரை கை ஆயுதம் மூலம் தாக்கியதற்காக 19 வயது இளையர் நன்னடத்தைக் கண்காணிப்பில் வைக்கப் பட்டுள்ளார். தேசிய சேவையாளரான ராஜன் சுலுவெதா ராஜேந்திரன் 140 மணி நேரம் கட்டாய சமூக சேவையும் செய்ய வேண்டும் என்றும் அவரது நன்னடத்தைக்கு உத்தரவாதமாக $5,000க்கான பிணைப்பத்திரத்தில் அவரது பெற்றோர் கையெழுத்திட்டும் உள்ளனர். ஜூன் மாதம் 27ஆம் தேதி தேசிய சேவை பணியை முடித்து விட்டு தனது காதலியுடன் யீஷூனில் உள்ள அவரது வீட்டிற்கு நள்ளிரவு 12 மணியளவில் ராஜன் வந்துள்ளார்.
அந்நேரத்தில் காதலியை வீட்டிற்கு அழைத்து வந்ததை எதிர்த்த தன் 48 வயது தாயாரை அவரது இடது கையில் தாக்கியுள்ளார். படுக்கையறையில் தொடர்ந்த வாக்குவாதம் மேலும் மோசமடைந்ததன் விளைவாக, கை ஆயுதம் ஒன்றை எடுத்து ராஜன் தனது தாயாரைத் தாக்கியுள்ளார். தாயார் போலிசாரைத் தொடர்பு கொண்டார். பின்னர் தாயார் கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

