அமெரிக்காவுடனான ஆழமான, பன்முக உறவை இன்று தொடங் கும் வாஷிங்டன் பயணத்தின்போது மேலும் விரிவுபடுத்த முடியும் என நம்பிக்கை கொண்டிருப்பதாக அமெரிக்காவின் சிஎன்பிசி செய்தி ஒளியலைக்கு அளித்த பேட்டியில் பிரதமர் லீ சியன் லூங் கூறியிருக் கிறார். "அது மிகவும் உறுதியான உறவு. உலகையும் வட்டாரத்தையும் பற்றிய கண்ணோட்டங்களின் உத்திபூர்வ ஒற்றிசைவையும், பொருளியல், வர்த்தகம், முதலீடு, தற்காப்பு, பாதுகாப்பு ஆகியவற்றில் பல ஆண்டுகாலமாக நீடித்து நிலைத்துவரும் ஆழமான ஒத்து ழைப்பையும் அடிப்படையாகக் கொண்ட உறவு," என்றார் அவர்.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், முக்கிய அதிகாரிகள், நாடாளுமன்றத் தலைவர்கள் ஆகி யோரைச் சந்திக்கவும் எதிர்வரும் வருகை வாய்ப்பளிக்கும் எனப் பேட்டியில் பிரதமர் குறிப்பிட்டார். இந்தப் பேட்டி நேற்றும் இன்றும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி றது. அதன் எழுத்துவடிவம் நேற்று வெளியிடப்பட்டது. அமெரிக்காவுக்கு ஆசியா முக் கியம் என்றும் இவ்வட்டாரத்துட னான உறவை அமெரிக்கா வளர்த்துக்கொண்டு, இவ்வட்டாரத்தின் அமைதிக்கும் நிலைத்தன்மைக்கும் தொடர்ந்து பங்களிக்க வேண்டும் என்றும் பிரதமர் லீ வலியுறுத்த விரும்புகிறார். அமெரிக்கா தன்னை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படக் கூடுமோ என்ற கவலை இருக் கிறதா எனப் பிரதமர் லீயிடம் கேட் கப்பட்டது.

