தடுப்பூசிக்கு மெடிசேவ்

தடுப்பூசிக்கு மெடிசேவ்

1 mins read
2eff00ca-3e18-4064-a5ef-cf92066ad612
-

பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசிகளைப் போடு வதற்கான கட்டணத்தை நவம்பர் முதல் தேதியிலிருந்து 'மெடிசேவ்' எனும் மருத்துவ சேமிப்புக் கணக்கிலிருந்து செலுத்தலாம். இதற்காக 'என்ஏஐஎஸ்' எனப்படும் தேசிய பெரியோர் நோய்த்தடுப்புத் திட்டம் தொடங்கப் பட்டிருப்பதாக நேற்று வெளியிடப்பட்ட சுகா தார அமைச்சின் அறிக்கை தெரிவிக்கிறது. தடுப்பூசி போட்டுக்கொள்வதன் மூலம் தவிர்க்கக்கூடிய நோய்களிலிருந்து பாது காக்க 18 வயது, அதற்கு மேற்பட்ட வயது டையவர்கள் போட்டுக்கொள்ள வேண்டிய தடுப்பூசிகள் பற்றி 'என்ஏஐஎஸ்' வழிகாட்டும். சிறார்களின் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரித்து நோய்ப் பரவலைக் குறைப்பது தற்போது நடப்பில் இருக்கும் 'என்சிஐபி' எனப்படும் தேசிய குழந்தைப்பருவ நோய்த் தடுப்புத் திட்டத்தின் நோக்கம்.

ஏற்கெனவே தடுப்பூசி போட்டுக்கொள் ளாத பெரியோர் அல்லது நோயால் பாதிக்கப் படும் அபாயத்தில் இருப்போர் இந்தத் திட்டம் மூலம் தகவல்களைத் தெரிந்துகொண்டு ஏற்ற தெரிவைத் தேர்ந்தெடுக்கலாம். 'என்ஏஐஎஸ்', 'என்சிஐபி' ஆகிய இரு திட்டங்களும் அனைத்து வயது சிங்கப்பூர் குடிமக்களுக்கும் குடியிருப்பாளர்களுக்கும் விரிவான நோய்த்தடுப்பு பரிந்துரைகளை வழங்கும் என்றும் அமைச்சு கூறியது. நோய்த்தடுப்புக்குத் தேவையான தடுப்பு மருந்துகள், தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டிய கால இடைவெளி, யாருக்கு தடுப்பூசி தேவை போன்ற தகவல்களைப் பொதுமக்களுக்கும் சுகாதாரப் பராமரிப்பு நிபுணர்களுக்கும் 'என்ஏஐஎஸ்' வழங்கும்.