இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர் எனப் பல பரிமாணங்களைக் கொண்டிருக்கும் 32 வயதான திரு ஷபீர் தபாரே ஆலம், உயரிய சிங்கப்பூர் இளையர் விருதைத் தட்டிச் சென்றார். மருத்துவம், கலைகள், விளை யாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குவதோடு, சமூகத் திற்கும் குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றியுள்ள இளையர்களைக் கௌரவிக்கும் வகையில் ஆண்டு தோறும் சிங்கப்பூர் இளையர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இளையருக்கான நாட்டின் ஆக உயரிய விருதான இது தேசிய இளையர் மன்றத்தால் வழங்கப்ப டுகிறது. அந்த வகையில், நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியில் நேற்று நடந்தேறிய விருது நிகழ்ச்சியில் துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னம், திரு ஷபீர் உட்பட ஐவருக்கு 'சிங்கப்பூர் இளையர்' விருதை வழங்கிக் கௌரவித்தார். இசை மூலமாக தமிழ் மொழியையும் கலாசாரத்தையும் மேலும் வளர்க்க முடியும் என்று திரு ஷபீர் நம்பிக்கை தெரிவித்தார்.
ஷபீருக்கு உயரிய 'சிங்கப்பூர் இளையர் விருது'
1 mins read

