ரயில் சேவை தொடங்கிய ஒருசில மணிநேரத்தில் டௌன்டவுன் மூன்றாவது பாதையின் ரயில் சேவையில் நேற்று தாமதம் ஏற்பட்டது. பிடோக் நார்த், மட்டார் உட்பட பல எம்ஆர்டி நிலையங்களில் தாங்கள் ரயிலுக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருந்ததாக குறைகூறிய பயணிகள், அது குறித்த புகைப்படங்களையும் ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய் த னர். ரயில் கோளாறு காரணமாக ஏறக்குறைய ஐந்து நிமிடங்கள் சேவை தாமதம் நிலவியதாகவும் பழுதான அந்த ரயில் வேறொரு ரயிலால் அகற்றப்பட்டதாகவும் அறியப்படுகிறது. இந்நிலையில், தெம்பனிஸ் வெஸ்ட் நிலையத்தில் பழுதான ரயில் ஒன்று நேற்று பிற்பகல் சேவையிலிருந்து அகற்றப்பட்ட தாகத் தெரிவித்த எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம், இதனால் ஐந்து நிமிடங்கள் சேவை தாமதம் ஏற்பட்டதாகக் கூறியது. "இதனையடுத்து, வேறொரு ரயில் தெம்பனிஸ் ஈஸ்ட் நிலை யத்தை நெருங்கி கொண்டிருந்த வேளையில் அதிலிருந்த பயணி ஒருவர் அவசரத் தொடர்பு பொத்தானை அழுத்தியதால் கூடு தலாக 15 நிமிடங்களுக்கு தாமதம் ஏற்பட்டது," என்ற அந்நிறுவனம், சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவ தாகவும் கூறியது.
டௌன்டவுன் தடம் 3 ரயில் சேவை நேற்று தொடங்கியது. டௌன்டவுன் பாதையில் 34 நிலையங்களுக்கு இடையேயும் பயணிகள் இன்று வரை இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

