மானபங்கச் சம்பவங்களின் எண் ணிக்கை அதிகரித்து இருப்பதாக போலிஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாதத் திற்கும் செப்டம்பர் மாதத்திற்கும் இடையில் 1,168 மானபங்கச் சம்பவங்கள் பற்றிய புகார்கள் போலிசுக்கு வந்தன. சென்ற ஆண்டு இதே கால கட்டத்துடன் ஒப்பிட்டுப் பார்க் கையில் இந்த எண்ணிக்கை 194 அல்லது 19.9% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. மானபங்கச் சம்பவங்களில் 152 சம்பவங்கள் பொதுப் போக்குவரத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டது. 76 சம்பவங் கள் பொதுப் பொழுதுபோக்கு நிலையங்களில் நிகழ்ந்தன.
பொதுப் போக்குவரத்தில் நிகழ்ந்த மானபங்கச் சம்பவங் களின் எண்ணிக்கை, சென்ற ஆண்டு ஜனவரி மாதத்திற்கும் செப்டம்பர் மாதத்திற்கும் இடைப் பட்ட காலகட்டத்துடன் ஒப்பிடு கையில் இந்த ஆண்டு 49% அதிகரித்து இருக்கிறது. அதேவேளையில், பொழுது போக்கு நிலையங்களில் மான பங்கச் சம்பவங்கள் சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு முதல் ஒன்பது மாதங்களில் 24.6% கூடின. இதனிடையே, ஜனவரிக்கும் ஜூலைக்கும் இடையில் நிகழ்ந்த தாகக் கூறப்படும் தனித்தனி யான மானபங்கச் சம்பவங்களின் தொடர்பில் 25க்கும் 57 வயதுக் கும் இடைப்பட்ட எட்டு ஆடவர் கள் மீது இந்த வாரத்தில் குற்றம் சுமத்தப்படும் என்று போலிஸ் தெரிவித்தது.

