இஸ்தானாவைப் பார்வையிட பொது மக்களுக்கு எதிர்காலத்தில் இன் னும் அதிக வாய்ப்புகள் ஏற்படுத்தப் படும் என்று அதிபர் ஹலிமா யாக் கோப் தெரிவித்துள்ளார். "சாதாரண சிங்கப்பூரர்களும் இஸ் தானாவுக்கு வந்துபோவதைப் பார்க்க விரும்புகிறேன்," என்று கூறிய திரு வாட்டி ஹலிமா, ஆர்ச்சர்ட் ரோட்டுக்கு அருகில் உள்ள இஸ்தானா வளா கத்தை பொதுமக்களுக்கு அதிகம் திறந்துவிட திட்டமிட்டுள்ளார்.
சீனப் புத்தாண்டு, நோன்புப் பெரு நாள், தொழிலாளர் தினம், தேசிய தினம், தீபாவளி என தற்போதுள்ள ஐந்து பொது வரவேற்பு தினங்களைத் தவிர, இஸ்தானாவுக்கு வர இன்னும் கூடுதல் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படும் என்றும் அதிபர் ஹலிமா கூறினார். நேற்றைய பொது வரவேற்பு தினத் தில் 9,300 பேர் பங்கேற்றனர். (வலது படம்) இளம் நடனமணிகளின் இந்திய நடனத்தை தமது கணவர் திரு அப்துல்லா அல்ஹப்ஷியுடன் கண்டு ரசிக்கிறார் அதிபர் ஹலிமா யாக்கோப். படம்: பெரித்தா ஹரியான்.

