சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன் றத்தின் கீழ் இயங்கும் நன்கொடை அமைப்பான 'ரஹ்மாத்தான் லில் அலமின்' அறநிறுவனம் ஏற்பாட்டில் யேல்=என்யூஎஸ் கல்லூரி, நன் யாங் தொழில்நுட்பக் பல்கலைக்கழ கம் ஆகியவற்றைச் சேர்ந்த மாண வர்கள், பள்ளிவாசல்களின் தொண்டூழியர்கள் என சுமார் 300 பேர் உட்லண்ட்சில் உள்ள யூசோஃப் இஷாக் பள்ளிவாசலி லிருந்து சிங்கப்பூர் விளையாட்டுப் பள்ளி உள்ள சாம்பியன்ஸ் வே சாலை வரை நல்லிணக்க நடையை நேற்று மேற்கொண்டனர். அந்தத் தொண்டூழியர்கள் 100 பைகளை விநியோகத்துக்குத் தயார்ப்படுத்தினர். அந்தப் பை ஒவ்வொன்றிலும் $50 பெறுமான முள்ள மளிகைப் பொருட்கள் இருந்தன. அவை உட்லண்ட்சில் வசிக்கும் 100 வசதி குறைந்த குடும்பங்க ளுக்கு விநியோகம் செய்யப்பட் டன.
'ரஹ்மத்தான் லில் அலமின்' அறநிறுவனத்தின் சார்பில் வழங்கப்பட்ட $50 பெறுமானமுள்ள மளிகைப் பொருட்கள் கொண்ட அன்பளிப்புப் பையை அமைச்சர் யாக்கூப் இப்ராஹிமிடமிருந்து (நடுவில்) பெற்றுக் கொண்ட குடும்பங்களில் ஒன்று திரு ஸ்டான்லி டேனியல் சுப்பிர மணியத்தின் குடும்பம். துப்புரவு மேலதிகாரியான திரு ஸ்டான்லி தம்பதிகளுக்கு ஏழு பிள்ளைகள் உள்ளனர். படம்: பெரித்தா ஹரியான்

