அமெரிக்காவுக்கு அதிகாரத்துவ வருகை மேற்கொண்டு சனிக் கிழமை (சிங்கப்பூரில் ஞாயிற்றுக் கிழமை) வாஷிங்டனை சென்ற டைந்த பிரதமர் லீ சியன் லூங், அமெரிக்காவுடனான சிங்கப்பூரின் நல்லுறவை மேன்மேலும் வளர்ப்பது முக்கியம் என வலியுறுத்தினார். பிளேர் ஹவுஸின் பொது மேலா ளர் மேத்யூ வெண்டல் பிரதமர் லீயை வரவேற்றார். "சிங்கப்பூரும் அமெரிக்காவும் நீண்டகாலமாக ஒத்துழைத்து வரு கின்றன. நமது மக்களும் அப்படித் தான். மக்கள் பலரும் ஒருவர் மற் றவரது நாட்டில் வேலை செய்கின் றனர், வாழ்கின்றனர், பிழைக்கின்ற னர்," என ஞாயிறு காலை (சிங்கப் பூர் நேரப்படி) தமது முகநூலில் அவர் எழுதியிருந்தார். "நாம் நெருக்கமானவர்கள். எனவே, நமக்கிடையிலான நல்லு றவை வளர்ப்பது முக்கியம்," என்று திரு லீ குறிப்பிட்டிருந்தார். வரலாற்றுச் சிறப்புவாய்ந்த பிளேர் ஹவுஸில் சிங்கப்பூர் கொடி பறப்பதைக் காட்டும் புகைப்படத் தையும் அவர் பகிர்ந்து கொண்டார். நீண்ட விமானப் பயணத்திற்குப் பிறகு சிங்கப்பூர் கொடி பறக்கும் காட்சி தனக்கு புத்துணர்வளித்த தாக அவர் கூறினார்.
பிரதமர் லீ சியன் லூங்கை வரவேற்கிறார் பிளேர் ஹவுசின் பொது மேலாளர் மெத்யூ வெண்டல்.

