ரயில் நிலையங்களில் போக்குவரத்து சாராத வர்த்தகங்கள் பற்றி அரசாங்கம் மறு ஆய்வு

ரயில் நிலையங்களில் போக்குவரத்து சாராத வர்த்தகங்கள் பற்றி அரசாங்கம் மறு ஆய்வு

2 mins read
0d0cb333-8928-4bf3-81b2-aa01e5b1dcf8
-

எம்ஆர்டி ரயில் நிலையங்களில் உள்ள கடைகள் மற்றும் விளம்பரத் திற்கான இடங்கள் போன்ற போக்குவரத்து சாராத வர்த்தகங் களை எஸ்எம்ஆர்டி, எஸ்பிஎஸ் டிரான்ஸிட் போன்ற நிறுவனங்கள் நிர்வகித்து வரும் தற்போதைய நிலையை மாற்றிய மைப்பது பற்றி அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. இதுகுறித்து ஆய்வு செய்து ஆலோசனை வழங்குவதற்கு மதிப் பீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக் கப்பட்டுள்ளதாக நில போக்கு வரத்து ஆணையம் நேற்று ஸ்ட் ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் கூறியது.

கடந்த மாதம் தாம்சன்=ஈஸ்ட் கோஸ்ட் தட ரயில் நிலையங்களுக் கான நிர்வாக ஒப்பந்தத் திற்கான ஏலக்குத்தகை வழங்கும் நிகழ்ச்சி யில் எஸ்எம்ஆர்டி நிலையங்களில் உள்ள கடைகள் தொடர்பான ஏலக்குத்தகை ஒன்று அடுத்த ஆண்டு அறிவிக்கப்படும் என்று ஆணையம் அறிவித்திருந் தது. "தாம்சன்=ஈஸ்ட் கோஸ்ட் தட எம்ஆர்டி நிலையங்களில் உள்ள கடைகள் மற்றும் விளம்பரத்திற்கான இடங்களைச் சரியான முறையி ல் பயன்படுத்திக் கொள்வதற்கு இது ஒரு முன்னோடித் திட்டமாகும்.

இதன்மூலம் அந்நிலையங் களைத் துடிப்பான ஒன்றாக மேம் படுத்த முடியும். இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அது தொடர்பான வர்த்தக ஏற்பாடுகள், வருமானக் கட்டமைப்பு, தொழில் நுட்பம் போன்றவை குறித்த ஆலோசனை வழங்க ஏற்புடைய நிபுணத்துவர்களுக்கு ஆணையம் அழைப்பு விடுத்துள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் கூறினார். தாம்சன் - ஈஸ்ட் கோஸ்ட் தட எம்ஆர்டி நிலையங்களில் உள்ள வர்த்தக இடங்களை தனியார்களிடம் விடுவதால் விளையும் பயன்களை அரசாங்கம் கவனத் துடன் பரிசீலிக்கும்.

"இத்திட்டத்தை மற்ற ரயில் நிலையங்களுக்குப் பரிந்துரைப்ப தற்கு முன்னர் அரசாங்கம் முழு மையாகத் திறனாய்வு மேற்கொள்ளும்," என்றும் அவர் தெரிவித்தார். எம்ஆர்டி நிலையங்களில் கடை கள், விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் வருமானம் போக்கு வரத்துக் கட்டண வருமானத்தைத் தாண்டிவிட்டது என எஸ்எம்ஆர்டி யின் அண்மைய நிதி அறிக்கையின் மூலம் தெரிய வருகிறது.

ரயில் நிலையங்களில் உள்ள கடைகள் மற்றும் விளம்பரத்திற்கான இடங்கள் போன்ற போக்குவரத்து சாராத வர்த்தகங்களை நிர்வகித்து வரும் தற்போதைய நிலையை மாற்றிய மைப்பது பற்றி அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்