தரம் குறித்த பிரச்சினையால் திரும்பப் பெறப்பட்ட 1,000 விழி வில்லை பெட்டிகள்

தரம் குறித்த பிரச்சினையால் திரும்பப் பெறப்பட்ட 1,000 விழி வில்லை பெட்டிகள்

1 mins read

தரம் குறித்த பிரச்சினையால் சுமார் 1,000 'அகியுவியு' விழி வில்லைப் பெட்டிகளை ஜான்சன் & ஜான்சன் விஷன் கேர் நிறுவனம் திரும்பப்பெற்றுள்ளது. அந்நிறுவனம் தானாக முன்வந்து இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப் பட்டது. அந்த வகை விழி வில்லைகளின் ஒரு சில தயாரிப்புகளில் தரக் குறைபாடு இருப்பதாகவும் அதைப் பயன்படுத்தினால் கண்பார்வை மங்கலாக இருக்கும் என்பதால் பயனீட்டாளர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்ததாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.

சிங்கப்பூர் மட்டுமல்லாமல் ஹாங்காங், தைவான், ஜப்பான் ஆகிய நாடுகளிலும் இந்தப் பிரச்சினை உள்ளதாகவும் அங்கும் இது போன்று பொருட்கள் திரும்பப் பெறப்பட்ட தாகவும் கூறப்பட்டுள்ளது. இதுவரை சுகாதார ஆபத்துகள் ஏதும் ஏற்படவில்லை என்றும் இந்தப் பிரச்சினை மீண்டும் ஏற்படாமல் இருக்க ஆவன செய்யப்படும் என்றும் குறிப்பிடப்பட்டது. கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த பாதிக்கப்பட்ட ரகங்கள் நேற்றோடு திரும்பப்பெறப்பட்டு விட்டன என்றும் சுகாதார அறிவியல் ஆணையத்தோடும் இதர அமைப்புகளோடும் நிறுவனம் இது குறித்து கலந்து ஆலோசித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது