மானபங்கச் செயலுக்காக எட்டு ஆடவர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மானபங்கச் செயலுக்காக எட்டு ஆடவர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

1 mins read

மானபங்கச் செயலுக்காக எட்டு ஆடவர்கள் மீது நேற்று நீதிமன்றத் தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை வெவ்வேறு சம்பவங்களின் ஈடு பட்ட அந்த எட்டு ஆடவர்களின் வழக்குகளும் அடுத்த மாதத்திற் குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. சஹா சுவீட் குமார், 25, ஆங் பூன் சாய், 29, தத்யாலா பல்விந்தர் சிங், 30, முகம்மது ருஸைனி ஜொஹாரி, 31, ஜக்ஜித் சிங், 32, வொங் டெக் குவான், 35, அஃபெண்டி முகம்மது நூர், 53, லீ யோக் வெங், 57 ஆகிய எட்டு ஆடவர்களும் மானபங்கம் செய்த குற்றத்திற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இந்த ஆண் டின் முதல் ஒன்பது மாதங்களில் மானபங்கக் குற்றச்சாட்டுகளின் எண்ணிக்கை சென்ற ஆண்டைக் காட்டிலும் 19.9% அதிகரித்திருப்ப தாக நேற்று முன்தினம் போலிசார் வெளியிட்ட அறிக்கையில் குறிப் பிடப்பட்டிருந்தது. ஜனவரி முதல் செப்டம்பர் வரை 1,168 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இது அதன் முந்தைய காலத்தைவிட 194 அதிகம். அதே காலக்கட்டத்தில் பொதுப் போக்குவரத்தில் மானபங்கச் சம்ப வங்களின் எண்ணிக்கை 49% உயர்ந்துள்ளது.