கட்டுமானப் பணி நிறுவனம் தனது ஆறு வெளிநாட்டு ஊழியர்கள் தொடர்ந்து அந்த நிறுவனத்தில் வேலை செய்வதற்கு வாய்ப்பளித்ததற்காக $3,650 சட்டவிரோத ஆதாயத்தை அந்நிறுவனத்தின் இயக்குநர் வாங்கியுள்ளார். அந்தக் குற்றத்திற்காக யுவான் ஷுங்காவுக்கு, 46, ஆறு வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதாக மனிதவள அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
யுவான் சுன் கட்டுமான நிறுவனமும் அதன் இயக்குநரும் இனி வெளிநாட்டு ஊழியர்களைப் பணியில் அமர்த்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு கூறியது. சென்ற ஆண்டு மார்ச் முதல் ஜூலை மாதத்திற்கிடையில் இரண்டு ஊழியர்களிடம் தலா $200ம் ஏப்ரல் முதல் ஜூலை வரை நான்கு ஊழியர்களிடம் தலா $150ம் பெறப்பட்டுள்ளது. கேட்கப்பட்ட தொகை கொடுக்கப்படாவிட்டால் ஊழியர்களின் வேலை அனுமதிச்சீட்டு புதுப்பிக்கப்படமாட்டாது என்று யுவான் மிரட்டியுள்ளார்.

