மணப்பெண்ணை அழைக்க வந்த பந்தய கார்களின் பேரிரைச்சல்

மணப்பெண்ணை அழைக்க வந்த பந்தய கார்களின் பேரிரைச்சல்

1 mins read
e0e6ecd3-c5ed-4fd8-9e00-316787379731
-

திருமணத்திற்குப் பெண் அழைப்பதற்கு ஊர்வலமாக வந்த கார்களின் சத்தம் பேரிரைச்சலாக இருந்தது என குடியிருப்பாளர் களில் சிலர் போலிசில் புகார் செய்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜூரோங் ஈஸ்ட் ஸ்திரீட் 24, புளோக் 247ல் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. திறந்தவெளி கார் நிறுத்துமிடத் தில் இரைச்ச லுடன் ஊர்வலம் சென்ற அந்தக் கார்களின் காணொளி ஒன்று ஸ்டோம்ப் இணையத் தளத்தில் வெளியிடப் பட்டுள்ளது. காலை சுமார் 7.30 மணிக்கு வந்த கார்களின் இயந்திர இரைச்சல் தூங்கிக் கொண்டிருந்தவர்களை எழுப்பி விட்டது. போலிசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆலோசனை வழங்கினர். பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்காத வண்ணம் சத்தத்தைக் குறைத் திருக்கவேண்டும் என்று குடியிருப்பாளர்கள் சிலர் கூறினர். படம்: ஸ்டோம்ப்