2020ஆம் ஆண்டுக்குள் 40 விழுக்காடு கூடுதலாக ரயில் பொறியாளர்களைப் பணியில் அமர்த்த எஸ்எம்ஆர்டி நிறுவனம் இலக்கு கொண்டுள்ளது. தற்போது எஸ்எம்ஆர்டி நிறுவனத்தில் 500 ரயில் பொறி யாளர்கள் பணி புரிகின்றனர். இந்த எண்ணிக்கையை 700க்கு உயர்த்த முடிவு எடுக்கப் பட்டுள்ளது. தயார்நிலை கண்காணிப்புக் குழுக்களையும் அமைக்க அது திட்டம் கொண்டுள்ளது. இந்தக் குழுக்கள் பராமரிப்புப் பணிகளைச் சரிபார்க்கும் பிரிவிடம் சுயேட்சை முறையில் புகார் செய்யும். பராமரிப்புப் பணிகள் சரியான முறையில் நடத்தப்படுகின்றனவா என்பது குறித்து உறுதி செய்ய இந்தக் குழுக்கள் அமைக்கப் படுகின்றன. எம்ஆர்டி ரயில் சேவையின் நம்பகத்தன்மையை உயர்த்த எடுக்கப்படும் இந்தப் புதிய நடவடிக்கைகள் குறித்து எஸ் எம்ஆர்டி நிறுவனத்தின் தலைவர் திரு சியா மூன் மிங் நேற்று அறிவித்தார். நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் ஒன் நார்த் முன்னாள் மாணவர்கள் மன்றத்தில் ஏறத்தாழ 250 எஸ்எம்ஆர்டி பொறியாளர்களிடம் திரு சியா பேசினார்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பொறியாளர்கள் எஸ்எம்ஆர்டியும் பர்மிங்ஹாம் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் பட்டப் படிப்புக்குப் பிந்திய சான்றிதழுக் கான பயிற்சியில் பயிற்சி பெற்று வருகின்றனர். பழைய ரயில் பாதைகளையும் பராமரிப்புப் பணிகளையும் மேம்படுத்த நிலப் போக்குவரத்து ஆணையத்துடன் எஸ்எம்ஆர்டி இணைந்து செயல்பட்டு வரும் போதிலும் ரயில் கட்டமைப்பின் மீள்திறனை உயர்த்த பொறியாளர் களின் நிபுணத்துவத்துக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று திரு சியா கூறினார்.
ரயில் சேவைத் தடை ஏற்படும்போது அது முழுமையாக முடங்கிவிடாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். ரயில் சேவைத் தடை ஏற்படும்போது மாற்று நடவடிக்கைக்குத் தயாராக இருக்க எஸ்எம்ஆர்டி விரும்பு கிறது. 2019ஆம் ஆண்டில் தாம்சன்=ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதை தொடங்கும்போது அதை ஏற்று நடத்தும் எஸ்எம்ஆர்டிக்குக் கூடுதல் பொறியாளர்கள் தேவைப்படுவர்.
தண்டவாளப் பராமரிப்புக்காக ஞாயிற்றுக்கிழமைகளில் எல்ஆர்டி சேவை நேரத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

