ஞாயிறுகளில் காலை 7 மணிக்குத் தொடங்கும் புக்கிட் பாஞ்சாங் எல்ஆர்டி

ஞாயிறுகளில் காலை 7 மணிக்குத் தொடங்கும் புக்கிட் பாஞ்சாங் எல்ஆர்டி

1 mins read
eaadcbad-eb87-4db2-92c9-d59e08aac18a
-

அடுத்த எட்டு ஞாயிற்றுக்கிழமைகளில் புக்கிட் பாஞ்சாங் எல்ஆர்டி சேவை காலை 5.30 மணிக்குப் பதிலாக 7 மணிக்குத் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தண்டவாளப் பராமரிப்புக்காகவும் பழைய தண்டவாளக் குறுக்குச் சட்டங்கள், இணைப்புகள் ஆகியவற்றை மாற்றுவதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. "எல்ஆர்டி சேவையின் நம்பகத்தன்மையை நிலைநாட்டவும் ரயில் சேவை சுமுகமாக இயங்குவதை உறுதி செய்யவும் இந்தப் பணிகள் நடத்தப்படுகின்றன. எனவே இப்பணிகள் மிகவும் முக்கியமானவை," என்று எஸ்எம்ஆர்டி நிறுவனம் தெரிவித்தது. புதிய மாற்றத்தின் விளைவாகப் பராமரிப்பு, பழுதுபார்ப்புப் பணிகளை மேற்கொள்ள ஓர் இரவுக்கு மூன்றரை மணி நேரம் கிடைக்கும் என்று எஸ்எம்ஆர்டி கூறியது.