சிங்கப்பூர் எதிர்நோக்கும் நிலப் பற்றாக் குறை, பொதுப் போக்குவரத்தை மேம் படுத்த அரசாங்கம் கொண்டுள்ள கடப் பாடு ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு 2018 பிப்ரவரி முதல் வாகன வளர்ச்சி விகிதம் பூஜ்ஜியமாகக் குறைக்கப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது. தற்போது வாகன வளர்ச்சி விகிதம் ஆண்டுக்கு 0.25 விழுக்காடாக இருக் கிறது. இதையடுத்து, சிறிய, பெரிய கார் கள், மோட்டார்சைக்கிள்களின் வளர்ச்சி விகிதம் பூஜ்ஜியமாகக் குறையும். ஆயினும், 2021 முதல் காலாண்டு வரை வர்த்தக வாகனங்களின் வளர்ச்சி விகிதம் ஆண்டுக்கு 0.25 விழுக்கா டாகத் தொடரும்.
இதன்மூலம், தங்களது தளவாட நடைமுறைகளின் செயல்திறனை மேம் படுத்தவும் வர்த்தக வாகனங்களின் தேவையைக் குறைக்கவும் நிறுவனங் களுக்குப் போதிய கால அவகாசம் கிடைக்கும் என்று ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கை கூறுகிறது. வாகன உரிமைச் சான்றிதழ் எண் ணிக்கை கணக்கீட்டிலிருந்து வளர்ச்சி விகித அம்சத்தை நீக்கப்போவதில்லை என்று அரசாங்கம் முன்னர் தெரிவித்து இருந்தது. ஆனால் 2015ஆம் ஆண்டில் அரசாங்கம் அந்த முடிவை மாற்றிக் கொள்ள முடிவு செய்தது. அப்போதைய போக்குவரத்து மூத்த துணை அமைச்சராக இருந்த திருவாட்டி ஜோசஃபின் டியோ, வாகன வளர்ச்சி விகிதம் பூஜ்ஜியமாகக் குறையலாம் என அறிவித்திருந்தார். வாகன உரிமைச் சான்றிதழ் எண் ணிக்கை குறைக்கப்பட்டால் அதற்கான கட்டணம் வெகுவாக உயரும் என்று வாகன விற்பனையாளர்கள் கருதுகின் றனர்.2017-10-24 06:00:00 +0800

