2025க்குள் 80,000பேருக்கு கட்டுமானப் பயிற்சி

2025க்குள் 80,000பேருக்கு கட்டுமானப் பயிற்சி

2 mins read
0d25af7f-50fc-4b34-b709-97a8ebf483a9
-

கட்டட, கட்டுமானத் தொழில்துறை யில் சேரவிருக்கும் சிங்கப்பூரர்கள், உடலுழைப்புக்கு மேலாக உற்பத்தித்திறனுக்கும் புத்தாக்கத்திற்கும் முன்னுரிமையளிக்கும் அதிநவீன தொழில்நுட்பங்களும் மின்னியல் வடிவமைப்பும் நிறைந்த வாழ்க்கைத் தொழிலை எதிர்பார்க்கலாம். எதிர்வரும் 2025ஆம் ஆண்டுக்குள் 80,000 பேருக்கு இத்த கைய தொழில்நுட்பங்களில் பயிற்சி அளிப்பது கட்டட, கட்டு மான ஆணையத்தின் இலக்கு. தற்போது 32,600 பேர் இந்தத் துறைகளில் பயிற்சி பெற்றுள்ளனர். இளம் சிங்கப்பூரர்கள் அதிக ஆர்வம் காட்டாத, திறன் குறைவான வெளிநாட்டு ஊழியர்களை அதிகம் சார்ந்திருப்பதால் உற்பத் தித்திறன் குறைவாக உள்ள கட்டுமானத் துறையில் கவர்ச்சி யான, உயர்திறன்மிக்க வேலை களை உருவாக்குவதற்காக வகுக் கப்பட்ட கட்டுமானத் தொழில் துறை உருமாற்றத் திட்டத்தின் ஒரு பகுதியாகத் தொழில்நுட்பப் பயிற்சி இடம்பெறுகிறது.

சிங்கப்பூர் எக்ஸ்போவில் நேற்று தொடங்கிய சிங்கப்பூர் கட்டுமான உற்பத்தித்திறன் வாரத் தின் தொடக்க நிகழ்ச்சியில் தேசிய வளர்ச்சி இரண்டாம் அமைச்சர் டெஸ்மண்ட் லீ உரு மாற்றத் திட்டத்தை அறிவித்தார். சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சருமான திரு லீ, தொழில் துறை உருமாற்றத் திட்டத்தை வகுப்பதில் முக்கிய பங்காற்றி வருகிறார். "அடிப்படையில், ஒட்டுமொத்த கட்டுமானத் துறையின் உருமாற் றத்தையும் பற்றியும் ஆரம்பத்திலிருந்து முடிவு வரையிலான ஒட்டு மொத்த செயற்பாடுகள் பற்றியும் பேசுகிறோம்," என்றார் அவர். எதிர்வரும் 2020ஆம் ஆண்டுக்குள், கட்டுமானத் திட்டப்பணி களில் 40 விழுக்காடு உற்பத்திக்கும் பாகங்களின் ஒருங்கிணைப் புக்கும் தொழில்நுட்ப வடிவமைப்பு பயன்படுத்தப்பட வேண்டும் என்பது ஆணையத்தின் இலக்கு. தற் போது வெறும் 10% திட்டப்பணிகளே இந்தச் செயல்முறையைப் பயன்படுத்துகின்றன.