உற்சாகத்துடன் குடமுழுக்குக்குத் தயாராகும் லோயாங் ஸ்ரீ மஹாகணபதி ஆலயம்

உற்சாகத்துடன் குடமுழுக்குக்குத் தயாராகும் லோயாங் ஸ்ரீ மஹாகணபதி ஆலயம்

2 mins read
ca2c6b51-be6f-4f3a-a163-05626ecffa3e
-

வில்சன் சைலஸ்

சாங்கியின் லோயாங் கடற்கரைக்கு அருகில் பத்து ஆண்டுகளுக்கு முன் அமைந்திருந்த துவா பெக் கொங் ஆலயத்தின் ஸ்ரீ மஹா கணபதி சந்நிதானம், புது இடத் தில் தனது இரண்டாவது குட முழுக்கிற்கு மும்முரமாகத் தயாரா கிக் கொண்டிருக்கிறது.

பழைய இடத்திலிருந்து கிட் டத்தட்ட இரண்டு கிலோமீட்டர் தூரம் நகர்ந்துள்ள இந்த சந்நி தானம், துவா பெக் கொங் எனும் சீன ஆலய வளாகத்தின் இடப் பகுதியில் அமைந்துள்ளது. நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை காலை 6.40 மணியளவில் தொடங்கவிருக் கும் ஆலயத்தின் குடமுழுக்கு விழாவில் கிட்டத்தட்ட 5,000 பக் தர்கள் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுவதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர். ஐம்பது அடி நீளம், முப்பது அடி அகலம் என்ற பரப்பளவில் அமைந்துள்ள ஸ்ரீ மஹாகணபதி சந்நிதானத்திற்குப் புதிதாக அறி முகம் கண்டுள்ள பல அம்சங்கள் மேலும் அழகு சேர்க்கின்றன. குறிப்பாக, ஆலயத்தின் உட் கூரையை மெறுகேற்றுகிறது கண் ணைப் பறிக்கும் தங்க நிறத்தினா லான இரண்டு தாமரைகள்.

சீனாவிலிருந்து தருவிக்கப் பட்ட இவை ஒவ்வொன்றும் முப்பது கிலோ எடை கொண்டவை என்ற விழா ஒருங்கிணைப்பாளர் திரு முரளி கண்ணன், 42, "தங்க நிற தாமரைகளைச் செய்து முடிப்பதற்கு மூன்று மாதங்கள் தேவைப்பட்டன," என்றார்.

லோயாங்கில் உள்ள துவா பெக் கோங் ஸ்ரீ மஹாகணபதி சந்நிதானத் தில் நாளை மறுநாள் நடைபெறவுள்ள குடமுழுக்கு விழா தொடர்பான பணிகள் மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. படம்: திமத்தி டேவிட்