காட்டுப்பன்றி தாக்கி ஆடவர் ஒருவர் காயமடைந்த விவகாரத் தைத் தொடர்ந்து அதுபோல் மீண்டும் எந்த சம்பவமும் நடக்கா மல் தடுக்க ஹில்வியூவில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளன. காட்டுப்பன்றிகள் நடமாட்டம் அதிகம் உள்ள இடமாகக் கருதப்படும் ஹில்வி2 பேரங்காடிக் குப் பின்புறமுள்ள காட்டுப்பகுதி யிலும் ஹில்வியூ ரைஸை ஒட்டிய பகுதியிலும் தற்காலிகமாக சிசி டிவி கேமராக்கள் பொருத்தப் பட்டதாக வேளாண்=உணவு கால்நடை மருத்துவ ஆணையம் தெரிவித்தது. இந்தக் கருவிகள் மூலம் பெறப்படும் காணொளிகள் அந்தப் பகுதியில் காட்டுப்பன்றி களின் நடமாட்டம் கண்டறிய உதவியாக இருக்கும். இதனால் ஆணையம் தகுந்த நடவடிக்கை கள் எடுக்க ஏதுவாக அமையும் என அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
மேலும், காட்டுப்பன்றிகள் நடமாட்டத்தை மோட்டார்சைக்கி ளோட்டிகளுக்கு அறிவுறுத்தும் வகையில் எச்சரிக்கைப் பலகை களை அமைப்பதோடு, அவை காட்டுப் பகுதியில் இருந்து சாலைக்கு வந்து விடாமல் தடுக்க சாலைத் தடுப்புகளை அமைக்கவும் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரி வித்தார். இதனை செயல்படுத்த தேசியப் பூங்காக் கழகம், வன விலங்கு மீட்புக் குழுவான ஏக் கர்ஸ், சிங்கப்பூர் வனஉயிர் காப்பகம், சிங்கப்பூர் தேசிய பல் கலைக்கழகம் ஆகியவற்றோடு இணைந்து ஆணையம் அணுக்க மாகப் பணியாற்றி வருகிறது.

