ஜூரோங் தீவில் செயல்படும் 'எக்ஸே„ன்மோபில்' ஆலையில் பெல்ஜிய நிறுவனமான 'கட்டோன் நட்டி'யின் ஓட்டுநரில்லா லாரி சேவையைத் துவங்கியுள்ளது. வாரத்தில் ஏழு நாட்களும் 24 மணி நேரம் இயங்கக்கூடிய இந்த ஓட்டுநரில்லா லாரி அந்த நிறு வனத்தில் உற்பத்தியாகும் பொருட் களை அதன் கிடங்கிற்குக் கொண்டு செல்லும் பணியை மேற்கொள்கிறது. ஆண்டுக்கு 250,000 டன் உற்பத்திப் பொருட்களை அது கையாளுகிறது. இந்த ஓட்டுநரில்லா லாரி திட்டம் ஆறு மாதத்திற்கு சோதனை முயற்சியாக இருக்கும். அதன்பிறகு படிப்படியாக விரி வாக்கம் கண்டு பன்னிரண்டு லாரிகளாக அதன் எண்ணிக்கை உயர்த்தப்படும்.
இதன்மூலம், ஆண்டுக்கு மூன்று மில்லியன் டன் எடைகொண்ட பொருட்களை அவற்றால் கையாள முடியும். அதன் பிறகு படிப்படியாக இந்தச் சேவை விரிவாக்கப்படும் என 'கட்டோன் நட்டி' நிறுவனம் நேற்று நடந்த செயல்முறை விளக்கக் கூட்டத்தில் தெரி வித்தது. பொறியியல், தொழில்நுட்பம், தளவாடம் ஆகிய மூன்று அம் சங்களை ஒருங்கிணைத்து பல துறைகளில் வாடிக்கையாளர் களுக்கு புத்தாக்கமிக்க சிறந்த தீர்வை வழங்குகிறோம்", என அந்நிறுவனத்தின் தலைமை நிர் வாகி கோன் கார்டன் தெரி வித்தார். "புத்தாக்க வளர்ச்சி அடிப்படை யில் இத்திட்டம் ஒரு சிறந்த முன்னுதாரணமாக விளங்கும். மேலும், ஊழியரணியின் திறனை மேம்படுத்த உதவும்" என கோன் கார்டன் கூறினார். 2020ஆம் ஆண்டுவாக்கில் சிங்கப்பூர் ஓட்டுநரில்லா வாகனத் திட்டத்தை அமல்படுத்தும் முயற்சியில் இருக்கிறது.
'எக்ஸே„ன்மோபில்' உற்பத்தி ஆலைக்கும் அதன் கிடங்கிற்கும் பெல்ஜிய நிறுவனமான 'கட்டோன் நட்டி'யின் ஓட்டுநரில்லா லாரி சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

