நிபுணத்துவ சேவைத் துறைக்கு மாற விரும்பினால் கூடுதல் உதவி

நிபுணத்துவ சேவைத் துறைக்கு மாற விரும்பினால் கூடுதல் உதவி

1 mins read

நிபுணத்துவ சேவைத் துறையில் புதிய வேலைகளுக்குத் தங்களைத் தயார்ப்படுத்திக்கொள்ள இடைப் பருவ வாழ்க்கைத்தொழிலர்கள் கூடுதல் உதவி பெறவுள்ளனர். உள்தணிக்கை, ஆலோசனை, நிகழ்ச்சி விளம்பரம் போன்ற நிபுணத்துவ சேவைத் துறைகளுக் கான வாழ்க்கைத்தொழில் மாற்றும் திட்டங்கள் வகுக்கப்பட்டு வரு வதாக மனிதவள இரண்டாம் அமைச்சர் ஜோசஃபின் டியோ நேற்று தெரிவித்தார். இடைப்பருவ வாழ்க்கைத்தொழி லர்கள் நிபுணத்துவ சேவைத் துறைக்கு மாற அல்லது தங்களது நிறுவனங்களிலேயே புதிய பொறுப்பு களை ஏற்கத் துணைபுரிவது இத்திட்டங்களின் நோக்கம். உயர்திறன்மிக்க தொழிலாளர் கள் தேவைப்படும் வளர்ச்சிகாணும் தொழில்துறைகளில் சிங்கப்பூரர் களைப் பணியமர்த்த அரசாங்கம் மேற்கொள்ளும் பெருமுயற்சியின் ஒரு பகுதி இது.

நிபுணத்துவ சேவைத் துறை களில் கட்டட வடிவமைப்பு, பொறி யியல், கணக்கியல், ஆலோசனை, விளம்பரம், வடிவமைப்பு, சட்டம், தலைமை அலுவலகச் சேவைகள் போன்றவை உள்ளடங்கும். வட்டார நாடுகளில் இத்தகைய சேவைகளுக்கான தேவை பெரும் பாலும் வளர்ச்சியடையும் என்ப தால், சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு அதிகமான வாய்ப்புகள் கிடைக்கும் என்றார் திருமதி டியோ. தொழில்முறைகளில் ஏற்படும் மாற்றங்களாலும் ஆலோசனை சேவைகளுக்கான தேவை எழுவ தாக அவர் குறிப்பிட்டார். இத்துறையிலுள்ள நிறுவனங் கள் இப்படிப்பட்ட தொழிலாளர் களுக்கு அதிக மதிப்பு தருகின்றனர் என்று அவர் சுட்டிக்காட்டினார்.