சிங்கப்பூரின் பணவீக்கம் நாட்டின் சராசரி அளவைவிட குறைந்த நிலையிலேயே இன்னும் இருக்கிறது என்றாலும் வலுவான பொருளியல் காரணமாக பணவீக்கம் கூடும் பட்சத்தில் அதைச் சமாளிக்க கொள்கைகளை வகுக்கும் அதிகாரிகள் உடனடியாக செயல்படும் நிலையில் இருக்க வேண்டும் என்று சிங்கப்பூரின் மத்திய வங்கி தலைவர் ரவி மேனன் தெரிவித்து இருக்கிறார். பொருளியல் வளர்ச்சி தொடர்ந்து பலமடைந்தால் சில நேரத்தில் பணவீக்கம் கூடக்கூடும். இத்தகைய சூழலில் உலகம் முழுவதும் உள்ள இதர அமைப்புகளைப்போலவே சிங்கப்பூரின் மத்திய வங்கியும் எதிர்கால கண்ணோட்டத் துடன் இருக்கவேண்டிய தேவை உள்ளது என்று சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் திரு மேனன் செவ்வாய்க்கிழமை ஒரு பேட்டியில் தெரிவித்தார்.
பணவீக்கம்: ஆயத்தம் தேவை
1 mins read

