சிறிய, நடுத்தர நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியர்களைக் குறைத்துக்கொண்டு, விவேகமான மனிதவள நடவடிக்கைகளை மேற்கொண்டு தொழில்நுட்பமயத் திற்கு மாறிக்கொள்ள உதவும் அரசாங்கச் செயல்திட்டத்தின் மூலம் 5,000க்கும் அதிக நிறு வனங்கள் பலன் அடைந்து இருக் கின்றன. இரண்டாவது மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ நேற்று இதனைத் தெரிவித்தார். கச்சிதமான நிறுவன மேம்பாட் டுச் செயல்திட்டம் (Lean Enterprise Development (LED) என்ற அந்தத் திட்டம் 2015 அக்டோபரில் நடை முறைக்கு வந்தது. சிறிய, நடுத்தர நிறுவனங்கள் அதிக புத்தாக்கத் தைத் தழுவிக்கொண்டு உற்பத் தித்திறனைப் பெருக்கிக்கொள்ள உதவும் திட்டங்களை நடைமுறைப் படுத்தும்போது, அந்த நிறுவனங் கள் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவதில் நீக்குப் போக்குடன் நடக்க வாய்ப்பளிப்பது இந்தத் திட்டத்தின் இலக்காகும்.
அமைச்சர் திருவாட்டி டியோ நேற்று சிங்கப்பூர் புத்தாக்கம் மற்றும் உற்பத்தித்திறன் மாநாட்டில் உரையாற்றினார். சிறிய, நடுத்தர நிறுவனங்கள் உருமாற வேண்டிய தேவை இருக்கிறது என்று குறிப் பிட்ட அவர், செலவுகளைக் குறைத்துக்கொள்வதால் மட்டும் அவற்றுக்கு அனுகூலம் கிடைத்து விடாது என்பதை அந்த நிறுவனங் கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். சிங்கப்பூர் தயாரிப்பாளர்கள் தாங்கள் தயாரிக்கும் பொருட் களின் மதிப்பை உயர்த்த போட்டிப் போட வேண்டியிருக்கிறது என்பது அவர்களுக்கு ஏற்கெனவே தெரிந்த ஒன்றுதான் என்று அமைச்சர் குறிப்பிட்டார். "முன்னிலும் சிறந்த பொருட் களைத் தயாரிக்க அவர்கள் புத்தாக்கத்துடன் திகழ வேண்டும். தொழில்நுட்பத்தில் முதலீடு செய்ய வேண்டும். வாடிக்கையாளர்களின் மாறி வரும் தேவையைக் கருத்தில் கொண்டு அதற்கேற்ப செயல்பட வேண்டும் என்பது நமது நிறு வனங்களுக்குத் தெரியும்," என் றார் அமைச்சர்.

