மாதிடம் கொள்ளை: 60 வயது ஆடவர் கைதானார்

மாதிடம் கொள்ளை: 60 வயது ஆடவர் கைதானார்

1 mins read

பொங்கோல் சென்ட்ரலில் ஒரு மின்தூக்கியில் செவ்வாய்க் கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு கத்தியைக் காட்டி 56 வயது மாதிடம் அவருடைய பணப்பையை கொள்ளை அடித்ததாகச் சந்தேகிக்கப்படும் 60 வயது ஆடவரை போலிஸ் கைது செய்து இருக்கிறது. அந்தப் பணப்பையில் $14.90 பணமும் சாவிக்கொத்தும் கைத்துடைப்புத் தாட்களும் இருந்தன. அந்த ஆடவர் வேறு ஒரு ஆயுதபாணி கொள்ளை முயற்சி ஒன்றில் ஈடுபட்டிருக்கக் கூடும் என்பதும் தெரியவந்து இருக்கிறது. அவர் மீது இன்று குற்றம் சுமத்தப்படும்.