சொத்துச்சந்தை வேகத்தைத் தணிக்க அரசு மேலும் முயலுமோ என நிறுவனங்கள் கவலை

சொத்துச்சந்தை வேகத்தைத் தணிக்க அரசு மேலும் முயலுமோ என நிறுவனங்கள் கவலை

1 mins read

நிலச் சொத்து மேம்பாட்டு நிறு வனங்கள், சிங்கப்பூரின் சொத்துச் சந்தையின் இப்போதைய நிலை குறித்தும் வருங்காலத்தில் அந்தச் சந்தைக்கான வாய்ப்புகள் குறித்தும் அதிக நம்பிக்கையுடன் இருக்கின்றன. இருந்தாலும் இந்தச் சந்தையின் வேகத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் அரசாங்கம் மேலும் பல நடவடிக்கைகளை அமல்படுத் தக்கூடும் என்று நிலச் சொத்து மேம்பாட்டாளர்கள் கவலைப்படு கின்றனர். சிங்கப்பூர் நிலச்சொத்து கட்டு மானக்காரர்கள் சங்கமும் சிங்கப் பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் இருக்கும் நிலச்சொத்துத் துறை யும் சேர்ந்து 'நிலச்சொத்து மனப் போக்கு அட்டவணை' என்ற ஓர் அட்டவணையை உருவாக்கி இருக்கின்றன.

இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் சிங்கப்பூர் சொத்துச் சந்தை பற்றிய நம்பிக்கை அளவு 6.1 ஆக இருந்தது. அது மூன்றாவது காலாண்டில் 6.6 ஆக மேம்பட்டு இருக்கிறது என்று இந்த அட்டவணை கூறுகிறது. அதிக எண்ணிக்கை என்பது, குறிப்பாக குடியிருப்பு மற்றும் அலுவலகச் சொத்துச்சந்தை பரந்த அடிப்படையில் மீட்சி அடை வதைப் புலப்படுத்துவதாகும். இந்தச் சந்தையின் எதிர்கால மனப்போக்கு அட்டவணை இரண் டாவது காலாண்டில் 6.2 ஆக இருந்தது. அது மூன்றாவது காலாண்டில் 6.7ஆக அதிகரித்து இருக்கிறது.