வலிமைமிக்க கடவுச்சீட்டுகளின் பட்டியலில் முதல் இடத்தில் சிங்கப்பூர்

வலிமைமிக்க கடவுச்சீட்டுகளின் பட்டியலில் முதல் இடத்தில் சிங்கப்பூர்

2 mins read
a5968722-f52d-4bd1-90bb-3e0e4a2d222f
-

உலகிலேயே வலிமைமிக்க கடவுச் சீட்டுகளின் பட்டியலில் சிங்கப்பூர் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) முதலி டத்தில் வந்துள்ளது. பராகுவே நாடு சிங்கப்பூரர் களுக்கு விசா விலக்கு அளித் திருப்பதன் மூலம் 159 குறியீடுகள் பெற்று முதல் நிலைக்கு சிங்கப்பூர் கடவுச்சீட்டு வந்துள்ளது. ஏர்டன் கேப்பிடல் அனைத்துலக ஆலோசனை அமைப்பின் விசா விலக்கு குறியீட்டின் அடிப்படை யில், ஆசிய நாடு ஒன்று வலிமை மிக்க கடவுச்சீட்டைக் கொண்டிருப் பது இதுவே முதல் முறை. "சிங்கப்பூரின் அனைத்து நாடு களுடனும் நட்புறவுடன் கூடிய அரசதந்திர உறவுகளுக்கும் பயன் மிக்க வெளியுறவுக் கொள்கைக் கும் இது ஒரு சான்று," என்று ஏர்டன் கேப்பிடல் சிங்கப்பூர் அலு வலகத்தின் நிர்வாக இயக்குநர் பிலிப்பி மே தெரிவித்தார்.

ஒரு நாட்டின் கடவுச்சீட்டு, எல்லைகள் தாண்டிய பயண வசதியுடன் எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லக்கூடிய வசதியை அல்லது தரை இறங்கியதும் விசா பெறும் வசதியை (விசா ஆன் எரைவல்) பெற்றிருக்கிறது என்பதன் அடிப்படையில் கடவுச்சீட்டுகள் வரிசைப்படுத்தப்படுகின்றன. ஐக்கிய நாடுகளைச் சேர்ந்த 193 உறுப்பு நாடுகளும் ஆறு நிலப்பிரிவுகளும் இதில் கணக்கில் கொள்ளப்பட்டன. உலகில் வலிமைமிக்க கடவுச் சீட்டுகளைப் பெற்ற நாடுகள் பட்டியலில் முதல் 10 இடங்களை ஐரோப்பிய நாடுகளே இடம்பெற்று வந்தன. கடந்த ஈராண்டுகளாக ஜெர்மனி முதல் இடத்தில் இருந் தது என்று நேற்று வெளியிடப்பட்ட அறிக்கை தெரிவித்தது.

ஆசிய நாடு ஒன்றின் கடவுச்சீட்டு உலகிலேயே வலிமைமிக்க கடவுச்சீட்டாகத் தேர்வுபெற்றிருப்பது இதுவே முதல்முறை. கோப்புப் படம்