சிங்கப்பூர் சுங்கத்துறையின் 6250- 8663 என்ற தொலைப்பிரதி எண் மூலம் பொதுமக்களுக்குப் போலியான தகவல்களும் அழைப்புகளும் வந்திருப்பதாக அந்தத் துறை போலிசில் புகார் ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது. சுங்கத்துறையில் இருக்கும் பொருளை விடுவிக்க வேண்டு மானால் பணம் கட்டும்படி அந்தச் செய்திகள் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டன. இத்தகைய செய்திகளையும் அழைப்புகளையும் சிங்கப்பூர் சுங்கத்துறை அனுப்பியதல்ல. இந்தத் துறை யாரையும் பணம் கேட்கவில்லை. தொடர்புகொள்ளும்படி எவரிடத்தி லும் தெரிவிக்கவில்லை என்று இதன் பேச்சாளர் ஒருவர் விளக்கினார். யாருக்காவது இத்தகைய தகவல் வந்தால் 6355- 2000, என்ற எண் மூலம் அல்லது customs_feedback@customs.gov.sg என்ற முகவரி மூலம் அதை சரிபார்த்துக்கொள்ளலாம் என்றும் இத்துறை தெரிவித்தது.
சுங்கத்துறை எச்சரிக்கை
1 mins read

