எரிசக்தி துறையில் தலைமைத்துவத் திறன் மேம்பாட்டுக்கு நிதியுதவி

எரிசக்தி துறையில் தலைமைத்துவத் திறன் மேம்பாட்டுக்கு நிதியுதவி

2 mins read

எரிசக்தி துறையில் தலைமைத் துவத் திறனை மேம்படுத்தும் வகையில் புதிய நிதியுதவி ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. 'சிங்கப்பூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் பவர் அண்ட் கேஸ்' நிர்வகிக்கும் இந்தத் திட்டம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் செயல்படத் தொடங்கும். இடையூறுகளை ஏற்படுத்தக் கூடிய தொழில்நுட்பம், கடுமை யான விதிமுறைகள், அதிகரிக்கும் பயனீட்டாளர்களின் தேவை போன்ற சவால்களை எதிர்நோக் கும் இந்தத் துறையில் தலைவர் களை உருவாக்கும் நோக்கத்தில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள் ளதாக 'எஸ்பி' குழுமத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இத்துறை சார்ந்த நிறுவனங் கள் தங்களின் தலைசிறந்த ஊழியர் களை இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற பரிந்துரைக்கலாம். இது குறித்த மேல் விவரங்கள் பின்னர் வெளியிடப்படும்.

சிங்கப்பூர் அனைத்துலக எரி சக்தி வாரத்தையொட்டி நடை பெற்ற 'ஸ்கில்ஸ்ஃபியூச்சர்' கல்வி நிதியுதவி வழங்கும் நிகழ்ச் சியில் இத்திட்டம் அறிவிக்கப் பட்டது. எரிசக்தி துறையில் தங் களது திறன்களை மேம்படுத்த விழையும் இடைப்பருவ வாழ்க்கைத்தொழிலர்களுக்கான இந்த கல்வி நிதியுதவியை மூத்த நாடாளுமன்றச் செயலாளர் லோ யென் லிங்கிடம் இருந்து 10 பேர் பெற்றனர். நிபந்தனைகள் அற்ற இந்த $5,000 ஸ்கில்ஸ்ஃபியூச்சர்' கல்விநிதியுதவி, தொழில் நுட்பக் கல்விக்கழகம், பலதுறை தொழில் கல்லூரி, பல்கலைக்கழகம், அரசாங்க கல்வி நிலையங்கள் போன்றவற்றில் பல்வேறு பயிற்சித் திட்டங்களுக்கு ஆதரவளிக்கிறது. அத்துடன் எரிசக்தி துறை சார்ந்த ஆறு கல்வி உபகாரச் சம்பளங்களும் நேற்றைய நிகழ்ச் சியில் வழங்கப்பட்டன. மரினா பே சேண்ட்ஸ், சேண்ட்ஸ் மாநாட்டு மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் வர்த்தக தொழில் அமைச்சு, கலாசார சமூக இளையர்துறை அமைச்சு களுக்கான மூத்த துணை அமைச் சர் சிம் ஆன் இந்த உபகாரச் சம்பளங்களை அறிவித்தார்.