அமெரிக்காவுடன் வலுவான ராணுவ உறவு

அமெரிக்காவுடன் வலுவான ராணுவ உறவு

1 mins read

சிங்கப்பூருக்கும் அமெரிக்கா வுக்குமிடையிலான வலுவான ராணுவ உறவுகளை மீண்டும் உறுதிப்படுத்தும் வண்ணம் சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் அமெரிக்க கடற்படைத் தலைவர் ரிச்சர்ட் ஸ்பென்சரை வா‌ஷிங்டனில் நேற்று முன்தினம் சந்தித்து பேசியுள்ளார். இரு நாடுகளுக் கும் இடையில் மேலும் ஒத்துழைப்பை மேம்படுத்தும் வழிகள் பற்றி இருவரும் கலந்துபேசியுள்ளனர். ஆசிய பசிபிக் வட்டாரத்தின் அமைதிக்கும் நிலைத்தன்மைக்கும் அமெரிக்காவின் பங்கு முக்கியமான ஒன்று என்பதை இருவரும் உறுதிப்படுத்தினர்.