நகராட்சி மன்ற விவகாரங்கள் பற்றி தங்கள் திறன்பேசி மூலம் புகார் தெரிவிக்கும் குடியிருப்பா ளர்கள் இனி தங்களின் புகார் களின் நிலை பற்றி தொடர்ந்து அறிந்துகொள்ளும் புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எந்த அரசாங்க நிறுவனத் திற்கு அவர்களின் கருத்துகள் அனுப்பப்பட்டுள்ளது என்பது பற்றியும் அவர்கள் அறிந்து கொள்ளலாம். கரையோரப் பூந்தோட்டங் களில் அமைந்துள்ள 'ஃப்ளவர் டோமில்' நடந்த நகராட்சி சேவை விருது கள் 2017 நிகழ்ச்சியில் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் கிரேஸ் ஃபூ அந்தத் தகவலை வெளியிட்டார். நகராட்சி விவகாரங்கள் பற்றிய தகவல்களை 'ஒரேசேவை' இணையவாசலில் அறிந்துவந்த குடியிருப்பாளர்கள் இனி அவர்கள் வசிக்கும் வட்டாரத்தில் வெவ்வேறு அரசாங்க அமைப்பு கள் நடத்தும் நிகழ்வுகளைப் பற்றியும் இனி அதில் அறிந்து கொள்ளலாம்.
செப்டம்பர் மாத இறுதி வரை 105,000 பேர் 'ஒரேசேவை' செயலியில் பதிவுசெய்துள்ளனர். 2015ல் அறிமுகப்படுத்தப்பட்ட செயலியின் மூலம் இதுவரை 136,000 புகார்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன. நகராட்சி சேவைகள் அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த நகராட்சி சேவை விருதுகள், நகராட்சி சேவைகளை நல்ல முறையில் செயல்படுத்து பவர்களையும் அமைப்புகளுக் கிடையில் உள்ள ஒத்துழைப்பையும் அங்கீகரிக்கின்றன.

