ஆணையம்: பொருளியல் மீட்சி சூடு பிடிக்கிறது

ஆணையம்: பொருளியல் மீட்சி சூடு பிடிக்கிறது

1 mins read

சிங்கப்பூர் பொருளியல் மீட்சி சூடுபிடிக்கிறது. தொடர்ந்து இரண்டு காலாண்டாக வளர்ச்சி விகிதம் வேகமடைகிறது. உல களவில் மின்னணுப் பொருட் களுக்குத் தேவை தொடர்ந்து அதிகரிப்பதே இதற்கான கார ணம் என்று சிங்கப்பூர் நாணய ஆணையம் தெரிவித்துள்ளது. சில துறைகளில் பலவீனங்கள் தொடர்ந்து நிலவுகின்றன என் றாலும் வர்த்தகம் தொடர்புடைய தொழில்துறைக்கு அப்பாலும் வளர்ச்சி பரந்த அளவில் இருக் கிறது. வரும் ஆண்டில் பொரு ளியல் வளர்ச்சி சீராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இந்த ஆணையம் தன்னுடைய ஆகப் புதிய பொருளியல் பரிசீலனையில் தெரிவித்தது.

இந்த ஆண்டு பொருளியல் வளர்ச்சி 2-3% இருக்கும் என்று அதிகாரத்துவ கணிப்புகள் குறிப்பிட்டுள்ளன. இந்த வளர்ச்சி அடுத்த ஆண்டு கொஞ்சம் மிதமடையும் என்று ஆணையம் தெரிவித் துள்ளது. உலகளவில் பொருளி யலில் ஏற்பட்டு வரும் சீரான வளர்ச்சி கொஞ்சகாலத்திற்குத் தொடர்ந்து இருந்து வரும் என்றும் வளர்ந்த நாடுகளில் அனுகூலமான தொழில் எண் ணங்கள் நிலவுவதாகவும் ஆணையம் குறிப்பிட்டது. ஆசியாவைப் பொறுத்தவரை யில் உற்பத்தித்துறை நடவடிக் கைகள் சூடுபிடிக்கத் தொடங்கி யிருக்கின்றன. வருமானத்தில் அதிகரிப்பு இடம்பெற்று இருக் கிறது என்றது ஆணையம்.