44 வயது மாது கொலை; 50 வயது ஆடவர்

44 வயது மாது கொலை; 50 வயது ஆடவர்

1 mins read
38877695-315e-4dff-a3a6-f451440c1eb3
-

அதே நாளில் போலிசில் சரணடைந்தார் லோயாங்கில் இருக்கும் கூட்டு ரிமை புளோக் ஒன்றில் 44 வயது மாது ஒருவர் வெள்ளிக்கிழமை கொலை செய்யப்பட்டதன் தொடர் பில் 50 வயது ஆடவர் ஒருவரை போலிஸ் கைதுசெய்து இருக்கிறது. கைதான சந்தேகநபர், கொலை யுண்ட மாதின் கணவர் என்று நம்பப்படுகிறது. அவர் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் போலிசிடம் அதே நாளில் சரண் அடைந்தார். முன்னதாக அவர் கடற்பாலம் வழி மலேசியாவுக்குள் சென்று இருந்தார்.

கிருஷ்ணன் ராஜு என்பவர் கைதாகி இருப்பதாகத் தெரிகிறது என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது. கொலையுண்ட மாது ரெத்தின வைத்திசாமி என்று அடையாளம் காணப்பட்டது. லோயாங் கார்டன்ஸ்சில் இருந்து தங்களுக்கு நள்ளிரவு 12.12 மணிக்கு இந்தச் சம்பவம் தொடர்பில் தகவல் வந்ததாக போலிஸ் தெரிவித்தது. போலிஸ் அங்கு சென்றபோது மாது அசைவின்றிக் கிடந்ததை போலிஸ் பார்த்தது. மருத்துவ அதிகாரிகள் அவர் இறந்து விட்டதாக அறிவித்தனர். ஒரு வீட்டின் படுக்கை அறையில் அந்த மாது கிடந்ததாகத் தெரிய வந்து இருப்பதாகவும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது. அவரின் உடலில் இருந்த காயங்கள் பற்றி தெரியவில்லை.

லோயாங் கார்டன்ஸ் கூட்டுரிமை புளோக்குக்கு வெளியே போலிஸ் அதிகாரிகள். படம்: வான் பாவ்