சிங்கப்பூரில் நோயுற்ற முதியோரை வீட்டிலேயே வைத்து பராமரிப் பதற்கு உதவும் அறிவார்ந்த சாத னங்களைப் பரிசோதித்துப் பார்க்க ஒரு நிலையம் தொடங்கப்பட்டு இருக்கிறது. டியுவி எஸ்யுடி என்ற ஜெர்மனி தொழில்நுட்ப நிறுவனம் அறி வார்ந்த சுகாதார பராமரிப்புச் சாத னங்களை உருவாக்கி இருக்கிறது. நோயுற்ற முதியவர்கள் மருத்துவ மனைகளுக்குத் தொடர்ந்து செல்லாமல் அதற்குப் பதிலாக வீட்டிலிருந்தபடியே சிகிச்சையைப் பெற அந்தச் சாதனங்கள் உதவும். இந்த ஜெர்மனி நிறுவனத்தின் தலைமையகம் சைன்ஸ் பார்க் டிரைவில் இருக்கிறது. அந்தத் தலைமையகத்தில் இந்த நிறுவனம் நேற்று தன்னுடைய நிலையத்தை (Smart Elderly Care @ Home Centre) அதிகாரபூர்வமாகத் தொடங்கியது. சாதனங்களின் பாதுகாப்பு, நம்பகத்தன்மை முதலான பலவற் றையும் இந்த நிறுவனம் பரிசோதித் துப் பார்க்க இந்த நிலையம் ஒரு தளமாக இருக்கிறது.
"வீடுகளில் தங்கியிருக்கின்ற, அதேநேரத்தில் பராமரிப்பாளர் களின் உதவி தேவைப்படுகின்ற முதியோருக்குப் பாதுகாப்பான தீர்வுகளை வழங்க நாங்கள் விரும்புகிறோம். சிங்கப்பூர் போன்ற நாடுகள் சுகாதாரப் பரா மரிப்பில் வரம்புக்குட்பட்ட வளங் களைக் கொண்டிருக்கின்றன. "ஆகையால் சமூகத்தில் மூப்படைந்தவர்களைப் பராமரிக்க தொழில்நுட்பங்களை அதிகமாக பயன்படுத்த வேண்டியிருக்கிறது," என்று இந்த ஜெர்மனி நிறுவனத் தின் நிர்வாக சபைத் தலைவர் டாக்டர் ஸ்டெப்கென் தெரிவித்தார். எடுத்துக்காட்டாக, இந்த நிறு வனம் உருவாக்கியிருக்கின்ற ஒரு மனித இயந்திரத்தில் ஒரு படச் சாதனம் இருக்கிறது. வீட்டில் இருக்கும் நோயா ளிகளை மருத்துவர்கள் அந்தச் சாதனத்தைப் பயன்படுத்திப் பார்க்க முடியும்.

