பிடோக்கில் புதிய இரண்டுமாடி நூலகம் திறக்கப்பட்டு இருக் கிறது. மின்னிலக்க வெளியீடு களைச் சேமிப்பதன் தொடர்பில் பொதுமக்களின் கருத்துகளை அரசாங்கம் நாடுகிறது. சிங்கப்பூரில் வெளியிடப்படு கின்ற, தயாரிக்கப்படுகின்ற மின் னிலக்கத் தகவல்கள் சேமிக்கப் படுகின்றன. அவை பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய நிலையில் இருக்கின்றன என்பதை உறுதிப் படுத்தும் வழிகளை அரசாங்கம் ஆராய்கிறது. இதன் ஒரு பகுதியாக தேசிய நூலக வாரியம் பொதுமக்களின் ஆலோசனைகளை நாடுகிறது. சிங்கப்பூரில் வெளியிடப்படும் வெளியீடுகளை இந்த வாரியம் பாதுகாத்து வைத்திருக்க தேவை யான இப்போதைய சட்டத்திட் டங்களில் மின்னிலக்க உள்ளடக் கங்களை ஒருங்கிணைப்பது எப்படி என்பதன் தொடர்பில் இந்த வாரியம் பொதுமக்களுடன் ஆலோசனைகளை நடத்தும். தொடர்பு தகவல் அமைச்சர் டாக்டர் யாக்கூப் இப்ராஹிம் நேற்று இந்த விவரங்களைத் தெரிவித்தார்.
பிடோக் பொது நூலகத் திறப்புவிழாவில் கலந்து கொண்ட அவர், எதிர்கால சிங் கப்பூரர்கள் நினைவுகூரும் வகை யில் இந்த ஏற்பாடுகள் மின் னிலக்க பதிப்புகளைக் காக்கும் என்று குறிப்பிட்டார். இப்போது மின்னிலக்கப் பதிப்புகள் ஏராளமாக வெளிவரு கின்றன. அவற்றைச் சேகரித்து கட்டிக்காத்து அவை எதிர்கால தலைமுறைகளுக்குப் பயன்படு மாறு செய்யவேண்டிய தேவை இருக்கிறது. இதற்கு மக்களுடன் கூடிய கலந்தாலோசனை அவசியம் என்றார் அமைச்சர். வெளியீட்டாளர்கள், ஆய்வா ளர்கள் உட்பட பொதுமக்க ளுடன் கூடிய கலந்தாலோசனை கள் நவம்பர் 13ஆம் தேதிக்கும் டிசம்பர் 13ஆம் தேதிக்கும் இடை யில் தொடங்கும்.

