தொடர்கல்வியில் உயர்கல்விக் கழகங்களின் பங்கு அதிகரிப்பு

தொடர்கல்வியில் உயர்கல்விக் கழகங்களின் பங்கு அதிகரிப்பு

2 mins read

சிங்கப்பூரின் வளர்சிக்கு முக்கிய மானவை என்று கருதப்படும் எட்டுத் துறைகளில் சிங்கப்பூரர் களுக்குப் பயிற்சி அளிப்பதை முன்னெடுத்துச் செல்லும் பணி யில் பல்கலைக்கழகங்கள் உள் ளிட்ட உயர்கல்விக் கழகங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 'ஸ்கில்ஸ்ஃபியூச்சர்' தொட ரில் இடம்பெற்றுள்ள, சராசரியாக 25 மணி நேர கால அளவு கொண்ட பல வகுப்புகளில் முதல் ஆண்டில் 10,000 சிங்கப்பூரர்களுக்கு பயிற்சி அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. 2020ஆம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கை ஆண்டுக்கு 50,000ஆக உயர்த்தப்படும். ஆண்டுக்கு 440,000 மணி நேரமாக இருக்கும் மொத்த வருடாந்திர தொடர் கல்வி, பயிற்சி நேரம் 2.2 மில்லியன் மணி நேரமாக அதிகரிக்கப்படும். தேவன் நாயர் வேலைவாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்புத் திறன் கழகத்தில் நேற்று நடைபெற்ற வாழ்நாள் கல்வித் திருவிழாவில் இந்த முயற்சி குறித்த அறிவிப்பை கல்வி அமைச்சர் (உயர்கல்வி மற்றும் திறன்கள்) ஓங் யி காங் வெளியிட்டார்.

இந்தப் புதிய திட் டத்தில் முதல் மூன்று ஆண்டு களில் $70 மில்லியனுக்கும் அதிகமான தொகை செலவாகும் என சிங்கப்பூர் 'ஸ்கில்ஸ்ஃபியூச் சர்' அமைப்பு எதிர்பார்க்கிறது. முதுகலைக் கல்வி தவிர மொத்த தொடர்கல்வி, பயிற்சி வழங்குதலில் 8% மட்டுமே உயர் கல்விக் கழகங்கள் வழங்குவதாக அமைச்சர் ஓங் கூறினார். கல்வி, பயிற்சி வழங்குவதற் கான பேராற்றல் இருந்தபோதும், மாணவர்களுக்குப் பயிற்றுவிப் பதே உயர்கல்விக் கழகங்களின் முக்கிய பணி என்பதால் தொடர் கல்வியில் அவை அதிகம் பங் களிப்பதில்லை என்றார் அவர்.

கல்வி அமைச்சின்கீழ் 'சிங்கப் பூர் ஸ்கில்ஸ்ஃபியூச்சர்' அமைப்பு ம று சீ ர மை க் க ப் ப ட் டி ரு ப் ப தை அடுத்து, தொடர்கல்வி, பயிற்சி யானது உயர்கல்விக் கழகங்களி னுடைய கல்விப் பணிகளின் அங்கமாக விரிவுபடுத்தப்பட்டு உள்ளது என்றும் அவர் குறிப் பிட்டார். உயர்கல்விக் கழகங்க ளுக்கு குறிப்பிட்ட துறைகள் ஒதுக்கப்படும். தொழிற்துறை களின் தேவைக்கேற்ப இந்தப் பாடங்களை நடத்துவதற்குத் தேவையான நடைமுறைகளை அவை கவனித்துக்கொள்ளும்.