செங்குத்தான ஓட்டம் மூலம் $380,000 திரட்டப்பட்டது

செங்குத்தான ஓட்டம் மூலம் $380,000 திரட்டப்பட்டது

1 mins read
fdf44392-1398-4198-8ab8-e0b7cd8069fa
-

செங்குத்தான ஓட்டத்துக்குத் தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்ள திருவாட்டி டோரா சுவா வாரத்துக்கு ஒரு முறை 47 மாடிகளின் படிக்கட்டுகளில் ஓடி உச்சிமாடிக்கு செல்வார். இதை இவர் கடந்த நான்கு மாதங்களா கச் செய்து வருகிறார். இந்தக் கடும் பயிற்சி நேற்று நடைபெற்ற மைண்ட் சேலஞ்ச் போட்டி, கேளிக்கை விழாவில் அவருக்கு கைகொடுத்தது. மரினா பே நிதி மையத்தின் 33 மாடி முதலாவது கட்டடத்தின் உச்சியை அவர் பத்து நிமிடங்க ளுக்குள் ஓடி முடித்தார். அவருடன் சுமார் 200 பேர் போட்டியில் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சி மூலம் மொத் தம் $380,000 திரட்டப்பட்டுள் ளது. இந்நிதி மனநலப் பிரச்சி னையிலிருந்து குணமடைவோ ருக்குத் தகுந்த வேலை தேடித் தருவதிலும் பயிற்சி அளிப்பதி லும் சேவையாற்றி வரும் 'மைண்ட்செட் லேர்னிங் ஹப்' எனப்படும் கற்றல் மையத்துக்கு பயன்படுத்தப்படும். இந்த கற்றல் மையம் கடந்த ஆண்டு திறக்கப்பட்டதிலிருந்து இதுவரை 182 பேருக்கு பயிற்சி யும் 73 பேருக்குத் தகுந்த வேலைகளையும் தேடிக் கொடுத் திருக்கிறது. "மனநோயாளிகளுக்கு என் னால் நேரடியாக உதவ முடியாது. ஆகவே இதுபோன்ற நிகழ்ச்சி மூலம் என்னால் ஆன சிறு பங்கைச் செலுத்தி, மன விழிப் புணர்வை மற்றவர்களிடம் பரப்பு வதற்கு உதவுகிறேன்," என்றார் 48 வயது திருவாட்டி சுவா.

33 மாடிகள் கொண்ட கட்டடத் தின் உச்சியை பத்து நிமிடங்க ளுக்குள் அடைந்த திருவாட்டி டோரா சுவா. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்