மைஸ்கில்ஸ்ஃபியூச்சர் வலைத்தளம் தொடக்கம்

மைஸ்கில்ஸ்ஃபியூச்சர் வலைத்தளம் தொடக்கம்

2 mins read
b63bad52-b067-4edf-abd3-150e7f15fef4
-

சிங்கப்பூரர்கள் சிறு வயதிலிருந்து பெரியவராக ஆகும் வரை, கல்வி, பயிற்சிக்கு அவர்கள் திட்டமிட உதவுவதற்காக ஒரு புதிய வாழ்க்கைத்தொழில் மற்றும் பயிற்சி வலைத்தளம் தொடங்கப்பட்டு இருக்கிறது. மைஸ்கில்ஸ்ஃபியூச்சர் (My SkillsFuture) என்ற அந்த வலைத்தளத்தை துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னம் நேற்று தொடங்கி வைத்தார். சிங்கப்பூரர்கள் பள்ளிக்கூடத்தில் படிக்கும்போதே தங்களுடைய கல்வித் தேவைகளைத் திட்டமிட வும் வாழ்க்கைத்தொழில் முழுவதும் அவர்கள் தேர்ச்சிகளை மேம்படுத்திக்கொள்ளவும் அந்த வலைத்தளம் உதவும். கல்வி அமைச்சு, சிங்கப்பூர் ஊழியரணி அமைப்பு, ஸ்கில்ஸ் ஃபியூச்சர் சிங்கப்பூர் ஆகிய அமைப்புகள் ஒரு கூட்டறிக்கையில் இந்த விவரங்களைத் தெரிவித்தன. 11 மற்றும் அதற்கும் மேற்பட்ட வயதுள்ள சிங்கப்பூரர்கள் அனைவருக்கும் கல்வி, வாழ்க்கைத் தொழில் வாய்ப்புகளை எடுத்துக்கூறி உதவுவது இந்த முயற்சியின் நோக்கம் என்று இந்த மூன்று அரசு அமைப்புகளும் கூறின.

கல்வி அமைச்சும் சிங்கப்பூர் ஊழியரணி அமைப்பும் ஏற் கெனவே நடத்தி வந்த இரண்டு இணையத்தளங்களுக்குப் பதி லாக இந்தப் புதிய தளம் இடம் பெறுகிறது. இந்தப் பழைய இரண்டு இணையத்தளங்களும் மாணவர்களுக்கு வாழ்க்கைத் தொழில் தொடர்பில் வழிகாட்டியும் வேலை, பயிற்சி உதவிகளை வழங்கியும் வந்தன. புதிய இணையத்தளத்தில் தொடக்கப்பள்ளி 5ஆம் வகுப்பு மாணவர்கள் முதல் பலரும் பல விளையாட்டுகளை விளையாட லாம். தங்களுக்கு எந்தத் தொழில் துறை பிடிக்கும் என்பதை அதன் வழி அவர்கள் தேர்ந்தெடுக்கலாம். வேலை செய்பவர்கள் இந்த வலைத்தளம் மூலம் வேலை வாய்ப்புகளைத் தெரிந்துகொள்ளலாம்.

பயிற்சிகளில் சேரலாம். தொடக்கப்பள்ளி 5 மற்றும் அதற் கும் மேலான வகுப்புகளில் படிக் கும் எல்லா மாணவர்களுக்கும் வலைத்தளக் கணக்கு ஒன்றைக் கல்வி அமைச்சு ஏற்படுத்தும். பெரியவர்கள் தங்கள் சிங்பாஸ் கணக்கை இதற்காகப் பயன் படுத்திக்கொள்ளலாம். சிங்பாஸ் என்பது தேசிய அளவிலான பொது ரகசிய குறியீட்டுத் திட்ட மாகும். இந்தத் திட்டத்தின் மூலம் அரசாங்கச் சேவைகளை மக்கள் பெறமுடியும். துணைப் பிரதமர் திரு தர்மன், சிங்கப்பூரர்கள் தங்கள் தேர்ச்சி களை மேம்படுத்திக்கொள்வதற்கு உதவும் ஒரு புதிய செயல்திட்டத் தையும் தொடங்கிவைத்தார்.