அவதூறு வழக்கில் ஆலய அதிகாரி வெற்றி

அவதூறு வழக்கில் ஆலய அதிகாரி வெற்றி

1 mins read

டெப்போ ரோட்டில் இருக்கும் ஸ்ரீ ருத்ரகாளியம்மன் ஆலயத்தின் கவுரவ செயலாளராக இருந்த பி சாந்திகுமார் என்பவர், ஜி கனக சிங்கம் என்ற ஆயுள் உறுப்பினர் சென்ற ஆண்டு ஜூன் 5ஆம் தேதி இந்த ஆலயத்திற்கு ஒரு கடிதம் எழுதியதையடுத்து அந்தக் கடிதம் தன்னை அவதூறு செய்ததாகக் கூறி நீதிமன்றத்தை நாடினார். இந்த அவதூறு வழக்கில் அவர் வெற்றி பெற்றார். அவ ருக்கு இழப்பீடாக $10,000 வழங்கும்படி உத்தரவிடப்பட்டது-. சென்ற ஆண்டு ஜூன் 19ஆம் தேதி நடந்த இந்த ஆலயத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் விவாதிக்க விரும்புகின்ற விவ காரங்களைத் தெரிவித்து கடிதம் எழுதும்படி உறுப்பினர்களுக்கு ஆலயத்தின் செயலாளர் வேண்டு கோள் விடுத்திருந்தார். அதனையடுத்து ஜி கனகசிங் கம் எழுதிய கடிதத்தில் தனக்கு எதிரான சரிபார்க்கப்படாத கோரிக்கைகள் இடம்பெற்றிருந்த தாகக்கூறி சாந்திகுமார் வழக் குத் தொடுத்தார்.

அந்தக் கடிதம் வருடாந்திர பொதுக்கூட்ட நிகழ்ச்சிநிரலுடன் ஆலயத்தின் உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப் பட்டது. அதில் இடம்பெற்றிருந் தவை பொதுக்கூட்டத்தில் பகிரங்கமாக விவாதிக்கப்பட்டன என் றும் தெரிவிக்கப்பட்டது. அதற்கு இரண்டு மாதம் கழித்து சாந்திகுமார், கனகசிங் கம் மீது வழக்குத் தொடுத்தார்.