இதய இயக்கத்தை மீட்க புதிய இயக்கம் துவக்கம்

இதய இயக்கத்தை மீட்க புதிய இயக்கம் துவக்கம்

2 mins read
64cc1631-58ea-43e8-b347-995c88c8b388
-

இதயத்துடிப்பு திடீரென நின்று போவதால் ஒவ்வோர் ஆண்டும் சிங்கப்பூரில் ஏறக்குறைய 2,000 மரணங்கள் நிகழ்கின்றன. ஆம்புலன்ஸ் வரும் வரை பாதிக்கப்பட்டவரின் இதயத் துடிப்பை மீட்க எந்தவித முதற்கட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாவிடில் ஒவ்வொரு நிமிடமும் அவர் உயிர் பிழைக்கும் சாத்தியம் 7 முதல் 10 விழுக்காடு வரை குறைகிறது. பொது இடங்களில் வழிப் போக்கர்களில் 20 விழுக்காட்டினர் மட்டுமே 'சிபிஆர்' எனப்படும் இதய இயக்க மீட்பு சிகிச்சை செய்ய முன்வருவதே மரணத்தை விளைவிக்கக்கூடிய முக்கிய காரணங்களில் ஒன்று எனத் தெரி விக்கப்பட்டுள்ளது.

உயிர்காக்கும் திறன் இல்லாமை, 'சிபிஆர்' சிகிச்சைக் கான உத்திகளைச் சரிவர மேற் கொள்வதில் போதிய தன்னம் பிக்கை இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் பலர் உதவ முன்வரத் தயக்கம் காட்டுகின்றனர். இதனால் பொதுமக்களில் அதிகமானோருக்கு 'சிபிஆர்' சிகிச்சையைக் கற்றுக்கொடுக்க தளம் அமைக்க சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் (எஸ்பிஎச்) நிறுவனத் தின் ஆதரவுடன் சிங்கப்பூர் இதய அறநிறுவனமும் தெமாசெக் கேர்ஸ் அறநிறுவனமும் இணைந்து 'இதய இயக்கத்தை மீட்டெடுங்கள்' எனும் இயக்கம் ஒன்றை தொடங்கி உள்ளன. ஒருவர் கீழே விழுந்து அவருடைய இதயத்துடிப்பு நின்று போகும்போது நேரம் தாழ்த்தாமல் 'சிபிஆர்' சிகிச்சையை முறை யாகக் மேற்கொள்வதன் முக்கியத் துவத்தை வலியுறுத்தவும் 'ஏஇடி' எனப்படும் இதய இயக்கத்தை மீட்க உதவும் சாதனத்தைப் பயன் படுத்த கற்றுத் தரவும் இந்த இயக்கம் முனைகிறது.

'இதய இயக்கத்தை மீட்டெடுங்கள்' இயக்கம் தொடங்கப்பட்டதை அடுத்து ஒரு மணிநேர வகுப்பில் பங்கேற்பாளர்கள் 'ஏஇடி' சாதனத்தைப் பயன்படுத்தி இதய இயக்கத்தை மீட்கக் கற்றுக்கொண்டனர். படம்: பெரித்தா ஹரியான்