இலவச சட்ட சேவைக்குப் புதிய நிலையம்

இலவச சட்ட சேவைக்குப் புதிய நிலையம்

1 mins read

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழ கத்தின் சட்டத் துறை இலவச சட்ட சேவைக்கென புதிய நிலை யத்தை நேற்று அறிமுகம் செய்தது. அந்த நிலையம் பலதரப்பட்ட இலவச சட்ட சேவைகளையும் பல்கலைக்கழக சட்டத் துறை மாணவர்களுக்கு செயல்வழிச் சட்டக் கல்வியையும் வழங்கும். புதிய நிலையத்தின் திறப்பு விழாவில் கலந்துகொண்ட சட்ட, நிதி மூத்த துணை அமைச்சர் இந்திராணி ராஜா, "சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக சட்டக் கல்வி மாணவர்கள் தாங்கள் வாழும் சமூகத்திற்கு ஆதரவ ளிக்கும் அதேவேளையில், அவர் களுக்கான வாய்ப்புகளின் தரத்தையும் எண்ணிக்கையையும் இந்தப் புதிய நிலையம் அதிக ரிக்கும்," என்று கூறினார்.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தின் இலவச சட்ட சேவை அலுவலகத்தையும் சட்டத் துறை யின் செயல்வழி சட்டக் கல்வித் திட்டங்களையும் புதிய நிலையம் ஒன்றிணைக்கும். சிறந்த நடைமுறைகளை உரு வாக்கி, நிகழ் உலகச் சவால்களை அறிந்து, அவற்றை எதிர்கொள்ள ஆயத்தமாகும் வகையில் புதிய நிலையம் பல்கலைக்கழக சட்டத் துறை மாணவர்களுக்கு நல்ல தளம் அமைத்துக் கொடுக்கும்.