சமயத் தலைவர்கள் கலந்துரையாடலில் இளவரசர் சார்ல்ஸ்

சமயத் தலைவர்கள் கலந்துரையாடலில் இளவரசர் சார்ல்ஸ்

2 mins read
6ce3745b-2dc2-472a-8fb3-b4f859ab21a8
-

சிங்கப்பூருக்கு வருகையளித்திருக் கும் பிரிட்டிஷ் இளவரசர் சார்ல்ஸ் நேற்று சிங்கப்பூர் சமயத் தலைவர் கள், இளம் தொண்டூழியர்கள் ஆகியோருடன் சமய நல்லிணக்கம் தொடர்பான விவகாரங்கள் குறித்து கலந்துரையாடினார். முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சரான டாக்டர் யாக்கூப் இப்ராஹிமுடன் பீஷானில் உள்ள நல்லிணக்க மையத்துக்கு வருகை புரிந்த இளவரசர் சார்ல்ஸ், எந்த சமயத் தின் வழிபாட்டு இடங்களுக்கும் பள்ளிச் சுற்றுலாக்களை மேற் கொள்ளலாம் போன்ற சமய நல் லிணக்கத்தை மேம்படுத்தும் யோச னைகள் பற்றி விவாதிக்கும் கலந் துரையாடலில் பங்கேற்றார்.

நல்லிணக்க மையத்தைச் சுற் றிப் பார்த்த அவருக்கு புனித குர்- ஆன் நூலின் மொழியாக்கம், சமய நல்லிணக்க முயற்சிகளை விளக்கும் நூல்கள் ஆகியவற் றைக் காண்பித்தார் முயிஸ் எனும் சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன் றத்தின் சமய நல்லிணக்க ஈடு பாட்டுப் பிரிவின் துணை இயக்கு நர் டாக்டர் முகம்மது ஹன்னான். கலந்துரையாடலுக்கு முன் பேசிய டாக்டர் யாக்கூப், "சமய நல்லிணக்கத்தை உறுதி செய்ய இங்கு அதற்குரிய சட்டங்கள் உண்டு என்றும் பரஸ்பர ஒற்றுமை, புரிந்துணர்வு ஆகியவற்றின் மூலம் சிங்கப்பூரில் சமய நல்லி ணக்கம் கட்டிக்காக்கப்படுகி றது," என்றும் கூறினார்.

இளவரசர் சார்ல்ஸ் சந்திப்புக் குப் பின் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசிய சீக்கிய ஆலோசனை மன் றத்தின் தலைவர் திரு ஜர்மால் சிங், 69, இங்குள்ள சமயங்களுக் கிடையிலான அமைப்பு குறித்து இளவரசர் ஆர்வத்துடன் கேட்டறிந் தார் என்றும் பிரிட்டனில் அனைத் துச் சமயங்களையும் ஒன்று சேர்க்கும் பிரதான அமைப்பு ஒன்று இல்லை என்றும் இந்த யோசனையை அவர் தன்னிடம் எடுத்துச் செல்வதாகக் கூறிய தாகவும் சொன்னார்.

பீஷானில் உள்ள நல்லிணக்க மையத்துக்கு நேற்று வருகையளித்த பிரிட்டிஷ் இளவரசர் சார்ல்ஸ் (இடக்கோடி) அங்கு வைக்கப்பட்டுள்ள சிங்கப்பூரின் சமயங்களுக்கிடையிலான நல்லிணக்க முயற்சிகளை விளக்கும் நூல்களைப் பார்வையிடுகிறார். அவருக்கு அருகில் முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் டாக்டர் யாக்கூப் இப்ராஹிம் இருக்கிறார். படம்: முயிஸ்