கண்ட இடங்களில் நிறுத்தப்படும் சைக்கிள்கள் பற்றி கருத்துரைக்கலாம்

கண்ட இடங்களில் நிறுத்தப்படும் சைக்கிள்கள் பற்றி கருத்துரைக்கலாம்

1 mins read

பகிர்வு சைக்கிள்களைக் கண்ட இடங்களில் நிறுத்திச் செல்வது பற்றி கருத்துக் கூறுவதற்காக நகராட்சி சேவைகள் அலுவலகம், நிலப் போக்குவரத்து ஆணையம், பகிர்வு சைக்கிள் நிறுவனங்கள் ஆகியவை இணைந்து 'ஒன்சர்வீஸ்' செயலியில் ஒரு புதிய வசதியை அறிமுகப் படுத்தியிருப்பதாக நகராட்சி சேவைகள் அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது. அப்படி அனுப்பப்படும் கருத்துகள் பகிர்வு சைக்கிள்கள் நிறுவனங்களுக்கு நேரடியாக அனுப்பப்பட்டுவிடும். இதன்மூலம் பகிர்வு சைக்கிள் செயலிகளைத் தங்களது கைபேசிகளில் வைத்திருக்காதவர்களும் இடையூறு ஏற்படுத்தும் விதமாக சைக்கிள் நிறுத்தப்பட்டிருப்பது குறித்து புகார் செய்ய முடியும். இப்படி அளிக்கப்படும் கருத்துகள், முக்கிய இடங்களை அடையாளம் கண்டு, எதிர்காலத்தில் சிறந்த உள்கட்டமைப்புத் திட்டத்தை வடிவமைக்க நகராட்சி சேவைகள் அலுவலகத்திற்கும் நிலப் போக்குவரத்து ஆணையத்திற்கும் உதவும்.