அரசதந்திரியின் கோரிக்கை நிராகரிப்பு

அரசதந்திரியின் கோரிக்கை நிராகரிப்பு

1 mins read
02241713-0afc-4798-87d1-417965335770
-

சவூதி அரேபியா அரசதந்திரி ஒருவர் விடுத்த கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்துவிட் டது. அந்த அரசதந்திரி ஹோட்ட லில் தற்காலிகமாகப் பணியாற்றிய ஒருவரை மானபங்கம் செய்ததற் காக இப்போது சிறையில் இருக் கிறார். அவருடைய மேல்முறையீடு அடுத்த ஐனவரி மாதம் விசார ணைக்கு வருகிறது. இந்த நிலையில் இப்போதைக்கு தன்னை சிறையிலிருந்து விடு விக்குமாறு அவர் கோரிக்கை விடுத்திருந்தார். பண்டர் யஹ்யா ஏ. அல்சாரனி, 40, என்ற அந்த அரசதந்திரி தன் னுடைய குடும்பத்துடன் சிங்கப் பூருக்கு வந்திருந்தார். இங்கிருந்தபோது செந்தோசா ஆளில்லா வானூர்திகள்: ஆபத்துகளை தவிர்க்கும் தீர்வுகளை முன்வைக்க அழைப்பு வில் இருக்கும் ஹோட்டல் ஒன்றில் 20 வயது ஊழியரை அவர் மானபங்கப்படுத்திவிட்டார். அதற்காக அவருக்கு 26 மாதம் மற்றும் ஒருவாரச் சிறைத்தண்டனையும் நான்கு பிரம்படித் தண்டனையும் விதிக்கப்பட்டது.

தான் குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்பட்டதையும் தனக்கு விதிக்கப்பட்ட தண்ட னையையும் எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்தார். ஆனால் ஜூலை 21ஆம் தேதி உயர்நீதி மன்றம் அதைத் தள்ளுபடி செய்துவிட்டது. தன் தண்டனையை ஒத்திப் போடும்படி மூன்று தடவை முயன்றும் தோல்வி அடைந்ததை அடுத்து அந்த அரசதந்திரி ஆகஸ்ட் 11ஆம் தேதி தன் சிறைத்தண்டனையை அனுபவிக் கத் தொடங்கினார்.

மானபங்கம் செய்ததற்காக 26 மாதம், ஒரு வாரச் சிறைத் தண்டனையும் நான்கு பிரம்படித் தண்டனையும் விதிக்கப்பட்ட சவூதி அரேபிய அரசதந்திரி பண்டர் யஹ்யா ஏ. அல்சாரனி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்