ஈஸ்ட் கோஸ்ட் ரயில் வழித்தடத்தில் தண்டவாள இணைப்பில் கோளாறு காரணமாக நேற்று ரயில் சேவை தாமதமடைந்தது. குயீன்ஸ்டவுன் நிலையத்தில் இருந்து ஜூரோங் ஈஸ்ட் நிலையம் செல்லும் பயணிகளுக்கு கூடுதலாக 30 நிமிட நேரம் பிடிக்கும் என்று எஸ்எம்ஆர்டி நிறுவனம் டுவிட்டரில் நேற்று பிற்பகல் 2.53 மணிக்குத் தெரிவித்தது. பிற்பகல் 3.30 மணிக்கு சேவை வழக்கநிலைக்குத் திரும்பியதாக நிறுவனம் அறிவித்தது. கிளமெண்டிக்கும் ஜூரோங் ஈஸ்ட் நிலையத்துக்கும் இடையில் இலவச பேருந்துச் சேவை நடப்பில் இருந்தது.
ரயில் சேவை தாமதம்
1 mins read

