மாரடைப்பில் பிழைத்தவர் மற்றவர்களைக் காக்க முடிவு; பயிற்சி வகுப்பில் பங்கெடுப்பு

மாரடைப்பில் பிழைத்தவர் மற்றவர்களைக் காக்க முடிவு; பயிற்சி வகுப்பில் பங்கெடுப்பு

1 mins read
d8f82e56-6817-4a7e-895e-837fd37a344d
-

சிங்கப்பூர் இதய நல அறநிறுவனம் நேற்று சிங்கப்பூர் எக்ஸ்போவில் பெரிய அளவில் முதலுதவி பயிற்சி வகுப்பை நடத்தியது. அதில் 1,000 பேர் கலந்துகொண்டு இதய இயக்க மீட்பு சிகிச்சை முறையைத் தெரிந்துகொண்டார்கள். அவர்களில் திரு இயோ குவான் காய், 60, என்பவர் ஒருவர். இவர் தன்னுடைய 27 வயது புதல்வியுடன் இதய இயக்க மீட்பு சிகிச்சையைக் கற்றுக் கொண்டார். திரு இயோ இரண்டு ஆண்டுகளுக்கு முன் கோல்ஃப் விளை யாடிக் கொண்டிருந்தபோது மார டைப்பால் பாதிக்கப்பட்டார்.

அப்பொழுது நல்ல வேளையாக அவருடைய நண்பர்களும் இரண்டு மருத்துவர்களும் உடனடியாக செயல்பட்டு அவரைக் காப்பாற்றி விட்டார்கள். இதற்குக் கைமாறாக இதய இயக்க மீட்பு சிகிச்சையைக் கற்றுக்கொண்டு மற்றவர்களுக்கு உதவ திரு இயோ முடிவு செய்தார். இதனால் அவர் நேற்றைய பயிற்சியில் கலந்துகொண்டார். மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிழைப்போர் எண்ணிக்கை மிகவும் குறைவு என்றாலும் அவசரநிலை யில் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருந்தால் உயிர்பிழைக்கும் வாய்ப்பு அதிகம் என்று தெரிவித்த திரு இயோ, அத்தகைய வாய்ப்பு காரணமாக தான் இப்போது உயிருடன் இருப்ப தாக தெரிவித்தார்.

மாரடைப்பு ஏற்பட்டு அதிலிருந்து உயிர் பிழைத்த இயோ குவான் காய் 3 மணி நேர இதய இயக்க மீட்பு சிகிச்சை பயிற்சி வகுப்பில் தன்னுடைய புதல்வி நிக்கோல் இயோவுடன் கலந்துகொண்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்