சாலை விபத்தில் 78 வயது சைக்கிளோட்டி மாண்டார்

சாலை விபத்தில் 78 வயது சைக்கிளோட்டி மாண்டார்

1 mins read

ஈஸ்ட் கோஸ்ட் ரோட்டில் நேற்று கனரகலாரி ஒன்று சம்பந்தப்பட்ட விபத்தில் சிக்கிய 78 வயது சைக் கிளோட்டி ஒருவர் மரணமடைந்தார். ஸ்டில் ரோடு சந்திப்பில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக போலிஸ் தெரிவித்தது. இது பற்றி நேற்றுக் காலை 9.27 மணிக்குத் தனக்குத் தகவல் வந்தது என்று போலிஸ் தெரிவித்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது. விபத்து நிகழ்ந்த இடத்திலேயே சைக்கிளோட்டி மாண்டுவிட்டதாக போலிஸ் பேச்சாளர் ஒருவர் நேற்று தெரிவித்தார். கனரகலாரியை ஓட்டி வந்தவர் கைதுசெய்யப்பட்டு இருக்கிறார். புலன்விசாரணை நடக்கிறது.