சிங்கப்பூரின் தமிழ் இலக்கியங் களில் அறம் எவ்வாறு சித்தரிக்கப் படுகிறது என்பதை ஆராய்ந்தது தமிழ் எழுத்தாளர் கழகம். சிங்கப் பூர் எழுத்தாளர் விழாவையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சிகளில் இது வும் ஒன்று. அந்த வரிசையில் தேசிய கலைகள் மன்றமும் தமிழ் எழுத் தாளர் கழகமும் சேர்ந்து நேற்று நடத்திய கருத்தரங்கில் கவி தைகள், சிறுகதைகள், புதினங்கள், வானொலி, தொலைக்காட்சி நாட கங்கள் போன்றவற்றில் பேசப்பட்ட 'அறம்' பற்றிய கட்டுரைகள் படைக்கப்பட்டன. தேசிய கலைக்கூடத்தின் 'ரூஃப்டாப் ஸ்டுடியோஸ்' அரங் கில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் முனைவர் அ.ரா. சிவ குமாரன், திரு பொன் சுந்தரராசு, டாக்டர் சீதாலக் ஷ்மி, முனைவர் மு. இளவழகன், திரு செ.ப. பன்னீர்செல்வம் ஆகியோர் தங்கள் கட்டுரைகளைப் படைத்த னர்.
'சிங்கப்பூர்த் தமிழ்க் கவிதை களில் அறம்', 'சிங்கப்பூர்த் தமிழ் மேடை நாடகங்களில் அறம்,' 'சிங்கப்பூர் தமிழ்ப் புதினங்களில் 'அறம்' என்று பல பரிமாணங்களில் 'அறம்' என்ற கருப்பொருள் கட்டு ரைகளில் ஆராயப்பட்டது. மாதங்கி, ஜெயந்தி சங்கர், ஷா நவாஸ் போன்று 90களில் சிங்கப்பூருக்கு இடம்பெயர்ந்து வந்த ஐந்து எழுத்தாளர்களின் 10 சிறுகதைகளில் எழுதப்பட்ட பணிப்பெண் கொடுமை, பொரு ளற்ற இல்லறம், பிழைப்பு ஆகிய கருப்பொருள்களில் அறம் பேசப் பட்டதென படைப்பாளர் திரு பொன் சுந்தரராசு கூறினார். சிங்கப்பூர் சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து 'அறம்' நிறைந்த மேடை நாடகங்கள் அரங்கேற்றப் பட்டதாகச் சுட்டிய முனைவர் இள வழகன், கடந்த 15 ஆண்டுகளாக அறம் எவ்வாறு மேடை நாடகப் படைப்புகளில் பேசப்பட்டது என் பதை விவரித்தார்.
சிங்கப்பூர் தமிழ் இலக்கிய படைப்புகளில் 'அறம்' பயன்படுத்தப்பட்டதை ஆராய்ந்த நிகழ்ச்சியில் தமிழ் மொழி ஆர்வலர்கள் பலர் பங்கேற்றனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

